Home /News /trichy /

நீட் தேர்வு முடிவுகளால் அடிவயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கிறோம் - அன்பில் மகேஷ்

நீட் தேர்வு முடிவுகளால் அடிவயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கிறோம் - அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் தான் காரணம் எனவும் தெரிவித்தார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
"நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும் பொழுதெல்லாம் அடிவயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டது போல் இருக்கிறது" என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய, 10 முக்கிய கோரிக்கைகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி,  திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, "திருவெறும்பூர் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தோம்.

பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைப்பது, பட்டா வழங்குவது உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.  அத்தியாவசியமாக நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவோம், நீண்டநாள் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்” என கூறினார்.

மேலும் நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும் பொழுதெல்லாம் தனக்கு அடிவயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டது போல் இருக்கிறது ஏனென்றால் தேர்வு முடிவுக்கு பிறகு மாணவர்கள் என்ன செய்து கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை என கூறினார்.

இதையும் வாசிக்க: TNPSC தேர்வில் பெண்களுக்கான ஒதுக்கீடு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் தான் காரணம் எனவும் தெரிவித்தார். நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாக இருந்தாலும், தொடர்ச்சியாக மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த ஹைடெக் பயிற்சிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பதாக கூறினார்.

மேலும் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தையும் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம் எனவும் நீட் தேர்வில் தோல்விடையும் மாணவர்கள் யாரும் தற்கொலை முடிவில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார். நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, இலவச தொலைப்பேசி எண்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு இலவசங்கள் வழங்குவது சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பணம் உள்ளவர்களுக்கு ஒரு கல்வி; பணம் இல்லாதவருக்கு ஒரு கல்வி என்ற நிலை தமிழ்நாட்டில் எங்கும் இருக்கக் கூடாது. சமூக நீதி மூலம் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். சமூக நீதிக்கும், சமத்துவத்திற்காக தான் தமிழ்நாடு அரசு இலவசங்களை வழங்கி வருகிறது" என்று பதிலளித்தார்.

 
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Anbil Mahesh Poyyamozhi, Minister Anbil Mahesh, Neet, Neet Exam, Tamilnadu

அடுத்த செய்தி