ஹோம் /நியூஸ் /Trichy /

திருச்சி அருகே 2 வயது சிறுவன் மர்ம மரணம்.. நூடுல்ஸ் சாப்பிட்டதால் உயிரிழப்பா? போலீசார் விசாரணை

திருச்சி அருகே 2 வயது சிறுவன் மர்ம மரணம்.. நூடுல்ஸ் சாப்பிட்டதால் உயிரிழப்பா? போலீசார் விசாரணை

திருச்சி அருகே 2 வயது சிறுவன் மர்ம மரணம்.. நூடுல்ஸ் சாப்பிட்டதால் உயிரிழப்பா? போலீசார் விசாரணை

திருச்சி அருகே 2 வயது சிறுவன் மர்ம மரணம்.. நூடுல்ஸ் சாப்பிட்டதால் உயிரிழப்பா? போலீசார் விசாரணை

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலெட்சுமி, நூடுல்ஸ் செய்து சாய் தருணிற்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள நூடுல்ஸை ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருச்சி அருகே, 2 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், 'நூடுல்ஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தானா?' என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி மருதமுத்து நகரை சேர்ந்தவர் சேகர் (34). பொக்லைன் டிரைவர்.

இவருக்கு திருமணமாகி, மகாலெட்சுமி என்ற மனைவியும், பெண் குழந்தை ஒன்றும், 2 வயதில் சாய் தருண் என்ற ஆண் குழந்தை ஒன்றும் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலெட்சுமி, நூடுல்ஸ் செய்து சாய் தருணிற்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள நூடுல்ஸை ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். மறுநாள் சனிக்கிழமை காலை, பரிட்ஜ்ஜில் வைத்திருந்த நூடுல்ஸை எடுத்து மீண்டும் சாப்பிட கொடுத்துள்ளார்.

அதன்பின் எதுவும் சாப்பிடாத சாய் தருண் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளான். அன்று மாலை திடீரென வாந்தி எடுத்த சாய் தருண், மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகாலெட்சுமி, சாய் தருணை தூக்கிக்கொண்டு, நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார், சாய் தருண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்ம மரணம்?

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  'சாய் தருண், அக்கி எனப்படும் தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

துரித உணவான நூடுல்ஸை உண்டதால் சிறுவனுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

அதேநேரத்தில், சிறுவனின் உடலில் விலா எலும்பு முறிந்து உள்ளது. மேலும், சிறுநீர் கழிக்கும் இடத்தில் காயங்கள் இருந்தன.

எனவே, சாய் தருண் உயிரிழப்புக்கு ஃபுட் பாய்சன் தான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணங்களா? என்பதை அறிய, பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

Published by:Esakki Raja
First published:

Tags: Mysterious death, Trichy