முகப்பு /செய்தி /திருச்சி / திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் சொத்துக்களை அபகரிக்க வக்பு வாரியம் முயற்சி என மக்கள் புகார்... உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் சொத்துக்களை அபகரிக்க வக்பு வாரியம் முயற்சி என மக்கள் புகார்... உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

நத்தர்ஷா பள்ளிவாசல், திருச்சி

நத்தர்ஷா பள்ளிவாசல், திருச்சி

நத்தர்ஷா பள்ளிவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும், 2,000 குடும்பத்தினர் இணைந்து, "21வது வார்டு சொத்து மீட்புக்குழு" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அமைப்பில் உள்ளவர்கள் கலந்து பேசி போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tiruchirappalli, India

நத்தர்ஷா பள்ளிவாசல் மற்றும் அதன் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை வக்பு வாரியம் அபகரிக்க முயல்வதை கண்டித்து, வரும் 21ம் தேதி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

திருச்சி சிங்காரத் தோப்பு பகுதியில் அமைந்துள்ள நத்தர்ஷா பள்ளிவாசல், 1,120 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இஸ்தான்புல் நாட்டை ஆண்ட மன்னர், நபிகள் நாயகத்தின் மேல் கொண்ட ஈர்ப்பினால், தனது பதவியை தனது சகோதரருக்கு கொடுத்து விட்டு துறவை மேற்கொண்டார்.

இஸ்லாமிய சூபியான அவர், திருச்சியிலேயே தங்கியிருந்து, திருச்சி மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்தார். இதனால், பலர் அவரை பின்பற்றி இஸ்லாத்தை தழுவினர். அவர் இறந்த பின் அவரை திருச்சியிலேயே அடக்கம் செய்தனர். அவரை அடக்கம் செய்த இடத்திலேயே பள்ளிவாசல் கட்டப்பட்டு, அவரது பெயரிலேயே நத்தர்ஷா பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகிறது.

இதுகுறித்து, 21 வது வார்டு சொத்து மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் சையது ஜாகீர் கூறிகையில், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அமைக்கப்பட்டது தான் வக்பு வாரியம். ஆனால் எங்களது நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு 1000 ஆண்டுக்கால வரலாறு உண்டு என கூறினார்.

மேலும், “நத்தர்ஷா அறக்கட்டளைக்கு, 10,000 ஏக்கருக்கு மேல் நிலமும், பள்ளிவாசல் மற்றும் பள்ளிவாசலை சுற்றியுள்ள, 16 ஏக்கர் 83 சென்ட் இடமும் சொந்தமாக இருக்கிறது. பள்ளிவாசலை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும், திருச்சி மாநகராட்சி, 21வது வார்டில் உள்ளன. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, கல்யாணசுந்தரம் நகர், வள்ளுவன் நகர், ஜீவா நகர் ஆகிய பகுதிகளில் இந்துகள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினரும் வசிக்கின்றனர்.

இதையும் வாசிக்க: 1000 ஆண்டுகள் பழமையான திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல்... சிறப்புகள் என்ன?

இவர்கள் அனைவரும் அனுபவித்து வரும் சொத்துகளுக்குரிய 'அ' பதிவேடு, பட்டா, பத்திரம் உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறை ஆவணங்களும் அவர்களிடம் இருக்கிறது. ஆனால், வக்பு வாரிய அறிவிப்பு காரணமாக, பத்திரப்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், 21வது வார்டில் வசிப்பவர்கள் யாரும் தங்களது அவசர, அவசிய தேவைக்கு கூட தங்களது நிலங்களை வாங்கவோ விற்கவோ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.” என தெரிவித்தார்.

எனவே, நத்தர்ஷா பள்ளிவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும், 2,000 குடும்பத்தினர் இணைந்து, "21வது வார்டு சொத்து மீட்புக்குழு" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அமைப்பில் உள்ளவர்கள் கலந்து பேசி போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

top videos

    மேலும் வக்பு வாரியம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தை கண்டித்து வரும், 18ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக முடிவெடுத்துள்ளதாகவும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் கூறினார்.

    First published:

    Tags: Mosque, Trichy, Wakf Board