Home /News /trichy /

கார்த்திக்ராஜா இசை நிகழ்ச்சிக்கு போனால் 'கலெக்டர்' ஆகலாம்? ரோட்டரி பலே திட்டம்...

கார்த்திக்ராஜா இசை நிகழ்ச்சிக்கு போனால் 'கலெக்டர்' ஆகலாம்? ரோட்டரி பலே திட்டம்...

திருச்சி ரோட்டரி சங்க ஆளுநர் ஜெரால்டு

திருச்சி ரோட்டரி சங்க ஆளுநர் ஜெரால்டு

Tiruchirappalli | தமிழத்தில் உள்ள ரயில்வே, அஞ்சலக வேலைகளில் பீகார்காரர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் இங்கே வேலை பார்க்கக்கூடாது என்பது நமது நோக்கம் அல்ல. அந்த வேலைவாய்ப்புகளை நமது மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சியில் வரும் செப்டம்பர் 24ம் தேதி, இசைஞானி இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜாவின் 'பொன்மாலை பொழுது' என்கின்ற இசை நிகழ்ச்சி (லைவ் கான்சர்ட்) நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில், நடன இயக்குனர் கலா மாஸ்டர் குழுவினர் நடன நிகழ்ச்சி உள்ளது. பிரபல நடிகை குஷ்பு நிகழ்வை தொகுத்து வழங்குகிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, சதீஷ் மற்றும் பிரபல பாடகர்கள் ஹரிஹரன், உன்னிமேனன், சாதனா சர்கம், சிவானி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான அறிமுக விழா திருச்சியில் நடந்தது. இதில் பேசிய திருச்சி ரோட்டரி சங்க ஆளுநர் ஜெரால்டு,
"நமது ரோட்டரி சங்கத்தின் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டோம். அதற்கு அதிகளவு நிதி தேவைப்பட்டது.

அதற்காக வரும் டிசம்பரில் இதுபோன்ற ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தலாம் என்று திட்டமிட்டோம். அதற்குள்ளாகவே இசையமைப்பாளர் கார்த்திக்ராஜாவின் நிகழ்ச்சிக்கான அரிய வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு, 130 ரோட்டரி சங்கங்கள் உள்ள, 130 கிராமங்களில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைக்க உள்ளோம்.

விஏஓ முதல் ஐஏஎஸ்  பதவிகள் வரை, ஆண்டுதோறும், 568 போட்டித் தேர்வுகள் மூலம், 2 லட்சம் அரசு வேலைகள் நிரப்பப்படுகின்றன.
இந்த வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நமது மாணவர்களிடம் இல்லை.

அதனால் தான், தமிழத்தில் உள்ள ரயில்வே, அஞ்சலக வேலைகளில் பீகார்காரர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் இங்கே வேலை பார்க்கக்கூடாது என்பது நமது நோக்கம் அல்ல. அந்த வேலைவாய்ப்புகளை நமது மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

130 கிராமங்களில் தலா ஒரு பயிற்சி மையம் அமைத்து, பல்வேறு போட்டித் தேர்வுகள் குறித்து பயிற்சிகள் அளிக்க உள்ளோம். வரும் ஆண்டுகளில், 130 கிராமங்களில் தலா ஒரு கிராமத்தில் இருந்து ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற இலக்குடன் செயல்படவிருக்கிறோம்.

Also see... டேஞ்சர் டிரைவிங்.. அபராதம் விதித்த போலீஸ்.. சாபம் விட்ட வாகன ஓட்டி

இந்த இசை நிகழ்ச்சி கிராமப்புற மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களை அரசு பணியாளராக மாற்றுவதற்கும் உதவும்.

எனவே, திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சிக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எங்களது நல்ல நோக்கத்திற்கு உதவுகின்ற கார்த்திக் ராஜா, கலா மாஸ்டருக்கு எங்கள் ரோட்டரி கிளப் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Music, Trichy

அடுத்த செய்தி