Home /News /trichy /

காசு கொடுத்தா லைசென்ஸ் தர்றேன்.. லஞ்சம் வாங்கும்போது சிக்கிய துறையூர் ஆர்டிஓ

காசு கொடுத்தா லைசென்ஸ் தர்றேன்.. லஞ்சம் வாங்கும்போது சிக்கிய துறையூர் ஆர்டிஓ

மோட்டார் வாகன ஆய்வாளர் கைது... 

மோட்டார் வாகன ஆய்வாளர் கைது... 

Tiruchirappalli | திருச்சி அருகே ஓட்டுநர் உரிமம் வழங்க, 6000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் சாந்தி டிரைவிங் ஸ்கூல் என்ற பெயரில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார். இவரது பள்ளியில், புதிதாக இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் கற்றுக் கொள்பவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவர்களுக்கு, துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தின் மூலம் ஓட்டுநர் உரிமங்கள் பெற்றுத் தரப்படுகின்றன. துறையூர் பகுதி அலுவலகத்தில் பணிபுரியும் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி, 'இலகுரக (Light Weight) வாகனங்களுக்கு, 1,500 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு, 3,000 ரூபாயும் கொடுத்தால் மட்டுமே உரிமம்' என்று கூறி கட்டாய வசூலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில், இலகுரக வாகன ஓட்டுனருக்கான உரிமங்கள் பெற, சத்யமூர்த்தியிடம், 4 விண்ணப்பங்களை சண்முகம் வழங்கியுள்ளார். 'பணம் கொடுக்காமல் ஓட்டுனர் உரிமம் தரமாட்டேன்' என்று சத்தியமூர்த்தி நான்கு விண்ணப்பங்களையும் கிடப்பில் போட்டுள்ளார்.

மேலும், 'ரூ.6,000 லஞ்சமாக கொடுத்தால்தான் உரிமம்' என்று சத்தியமூர்த்தி திட்டவட்டமாக கூறியதால் சண்முகம் அதிருப்தியடைந்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம், திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் புகார் அளித்தார்.

Also see... சுங்க கட்டணம் வசூலிப்பு: காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம்

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், இன்று சத்தியமூர்த்தி, 6000 ரூபாய் லஞ்சப் பணத்தை வாங்கிய போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Bribe, Driving License, Trichy, Vehicle, Vigilance officers

அடுத்த செய்தி