ஹோம் /நியூஸ் /திருச்சி /

என்னை பார்த்து மோடி பயப்படுகிறார் - திருச்சியில் ஆ.ராசா பேச்சு

என்னை பார்த்து மோடி பயப்படுகிறார் - திருச்சியில் ஆ.ராசா பேச்சு

ஆ.ராசா, நரேந்திர மோடி

ஆ.ராசா, நரேந்திர மோடி

Rasa speech | மதம் என்றால் தவறு இருக்கும். தவறு என்றால் அதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒப்புக் கொள்ளாவிட்டால் உதை விழும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

மத்திய அரசின் இந்திமொழி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், திருச்சி புத்தூர் நால்ரோட்டில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகரச் செயலாளரும், மேயருமான அன்பழகன் தலைமை வகித்தார். மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., பேசியதாவது, “தமிழகத்தில் முதல்முறையாக இந்தி மொழி திணிப்பை எதிர்த்து கடந்த, 26.12.1937 அன்று பெரியார் தலைமையில் மாநாடு நடந்த இடம் திருச்சி. கடந்த, 85 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தி எதிர்ப்பு என்ற வார்த்தையை கூட முதல்வர் ராஜாஜி பயன்படுத்த விடாததால், தமிழர் மாநாடு என்ற பெயரில் பெரியார் நடத்தினார்.

இந்தி மூலமாக இந்துத்துவாவை திணித்து, தமிழர்களின் பண்பாட்டை சிதைக்க முயற்சிக்கின்றனர். சமஸ்கிருதத்தை பின்னால் கொண்டு வர வேண்டும். இந்துத்துவாவை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்தியை திணிக்க முயல்கின்றனர். மொழி எங்களை சேர்க்கும். மதம் எங்களை பிரிக்கும். தமிழ் மொழி என்பது நமது அடையாளம், கலாச்சாரம், பண்பாடு” என்றார்.

இதையும் படிங்க : ஆவின் பால் விலை உயர்வால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொடுத்த விளக்கம்!

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஸ்டாலினை கண்டு மோடி பயப்படுகிறார். அதைவிட அவரது காரில் ஏறி நான் செல்வதால் என்னை கண்டும் பயப்படுகிறார். எனது வேட்டியை பார்த்து பயப்படுகிறார். அதில் உள்ள கருப்பு சிகப்பு கரையை பார்த்து பயப்படுகிறார். வரும், 2024ம் ஆண்டில் கருப்பு, சிகப்பா? காவியா? என்று பார்த்து விடுவோம்.

மதம் என்றால் தவறு இருக்கும். தவறு என்றால் அதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒப்புக் கொள்ளாவிட்டால் உதை விழும். தீபாவளி வாழ்த்து சொல்லாதற்கு காரணம் கேட்டால், அதன் பின்னணி அசிங்கமாக இருக்கும். பாஜகவின் கையை கட்டிப்போட்ட பெருமை கருணாநிதிக்கு உண்டு. இன்னும் எங்களது எம்பிக்களை கண்டு பாஜக பயப்படுகிறது. ஜாதி அடையாளத்தை ஒழித்தது தான் திராவிடத்தின் சாதனை” என்று தெரிவித்தார்.

மேலும், “திகார் ஜெயிலில், 15 மாதம் இருந்தேன். இந்தி படித்தேன். இந்தியிலும் பேசினேன். மீண்டும் என்னை ஜெயிலுக்கு அனுப்பினால் இந்தி படிப்பேன். திருச்சியில், 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி பிரசார சபா இருக்கிறது. இந்தி படிப்பவர்கள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை ஒருபோதும் தடுத்தது இல்லை.

இதையும் படிங்க : தமிழக ஆளுநர் பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்படுகிறார் - துரை வைகோ விமர்சனம்

ஆனால், வலுக்கட்டாயமாக எங்கள் மீது திணிப்பதை தான் எதிர்க்கிறோம். இந்தியை திணிக்க முயன்றால், தனி தமிழ்நாடு கேட்போம். இதற்காக என் மீது வழக்குப் போடக்கூடாது. கடந்த, 85 ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானம் போட்ட மறைமலையடிகள் மீதுதான் வழக்குப் போட வேண்டும். ஒரே வர்ணம் மட்டுமே அடித்தால் ஓவியம் இருக்காது. அதுபோல, ஒரே மொழி என்றால் இந்தியா இருக்காது” என்றும் பேசினார்.

Published by:Karthi K
First published:

Tags: BJP, DMK, Trichy