ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்

திருச்சியில் அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்

அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

Trichy Government Exhibition | ரூ.2.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் துவங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில்  அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்  அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை   நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி  ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனை தொடர்ந்து  பயனாளிகளுக்கு ரூ.2.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் , சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார்,தியாகராஜன் மாவட்ட  வருவாய் அலுவலர்  இரா.அபிராமி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: கோவிந்தராஜ்

First published:

Tags: Local News, Trichy