ஹோம் /நியூஸ் /திருச்சி /

'ஜில்லா' பட பாணியில் அமைச்சர் நேரு பிறந்தநாளில் 'மாஸ்' காட்டும் மகன்!

'ஜில்லா' பட பாணியில் அமைச்சர் நேரு பிறந்தநாளில் 'மாஸ்' காட்டும் மகன்!

அமைச்சர் நேரு பிறந்தநாள்

அமைச்சர் நேரு பிறந்தநாள்

நேரடியாக அரசியல் களத்தில் இறங்காத அருண் நேரு, முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளை மட்டுமே தற்போது 'டீல்' செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திமுக முதன்மை செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என். நேரு, கடந்த, 50 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுகவின் அடையாளமாக விளங்கி வருகிறார். ஆண்டுதோறும், நவம்பர், 9ம் தேதி வரும் இவரின் பிறந்தநாளை, திருச்சி மாவட்ட திமுகவினர் வெகு உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என மாவட்டம் முழுவதும் பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டும். இன்று தனது, 71வது பிறந்தநாளையொட்டி, திருச்சி மாவட்ட திமுக தலைமையகமான கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி சிலைகளுக்கு அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.

அமைச்சர் நேருவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக திருச்சியில் திரும்பும் திசையெல்லாம் சுவரொட்டிகளும், ப்ளக்ஸ் பேனர்களும் அலங்கரிக்கின்றன. வழக்கத்திற்கு மாறாக அமைச்சர் நேருவுக்கு இணையாக அவரது மகன் அருண் நேருவின் படங்களும் இடம் பெற்றுள்ளன.

இதுவரை அருண் நேரு நேரடி அரசியலில் ஈடுபட்டது இல்லை.  இந்நிலையில், திருச்சி மாநகரம் தென்னூர் மகாத்மா காந்தி பள்ளி அருகே வைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட ப்ளக்ஸ் பேனர் திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see... 97 வயது மூதாட்டிக்கு சிறிய துளை மூலம் நவீன சிகிச்சை... தென்காசி அரசு மருத்துவமனை சாதனை

நடிகர் விஜய், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த 'ஜில்லா' படத்தில் வரும் "சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா" பாடல் பாணியில் இந்த ப்ளக்ஸ் பேனர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளக்ஸ் பேனர், விரைவில் அருணின்  நேரடி 'அரசியல் எண்ட்ரி'யை கட்டியம் காட்டுவதை போல இருக்கிறது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Birthday, K.N.Nehru, Trichy