ஹோம் /நியூஸ் /திருச்சி /

மருத்துவர்கள் மீது நடவடிக்கை கூடாது -அமைச்சர் நேரு 'ரெகமெண்ட்'

மருத்துவர்கள் மீது நடவடிக்கை கூடாது -அமைச்சர் நேரு 'ரெகமெண்ட்'

கே என் நேரு - அமைச்சர்

கே என் நேரு - அமைச்சர்

"மருத்துவர்கள் என்ன குறை, குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது" என்று அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில், பருவக்கால பேரிடர் நோய் தடுப்பு குறித்த மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில், நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பேசினார். அப்போது, “ கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய முறையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கினால், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள். நிறைய மருத்துவர்கள் கிராமங்களில் பணியாற்ற முன்வருவார்கள்.

இதுகுறித்து துறை அமைச்சர் என்கிற முறையில் மா.சுப்ரமணியன் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகத் துறை சிறப்பாக செயல்படும் போது, சுகாதாரத் துறையின் வேலை பாதியாக குறைந்துவிடும். அந்த வகையில் சுகாதாரத் துறைக்கு உறுதுணையாக நகராட்சி நிர்வாகத் துறை செயல்படும்.

அதிகாரிகளாகிய நீங்கள் தான் நிரந்தரமானவர்கள் நாங்கள் அரசியல்வாதிகள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே அதிகாரத்தில் இருக்க முடியும்.

நான் அமைச்சராகி, ஐந்து சுகாதாரத்துறை அமைச்சர்களை பார்த்துள்ளேன். அதில் மா.சுப்ரமணியனுக்கு வந்த கடினமான காலம் போல் வேறு எந்த அமைச்சருக்கும் ஏற்படவில்லை. கொரானா என்ற அந்த கடினமான காலத்தையும் அவர் சிறப்பாக கையாண்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்திற்கு ஒரு பல் மருத்துவக் கல்லூரியும், ஒரு சித்த மருத்துவக் கல்லூரியும் வேண்டும். அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் வேண்டும்.

மருத்துவத் துறையில் திருச்சி மாவட்டம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக இருக்க, அமைச்சரும், துறை அதிகாரிகளும் உதவ வேண்டும்” என்றார்.

Also Read:  மருத்துவமனையில் புகுந்து பெயிண்டர் கழுத்தறுத்துக் கொலை.. அலறியடித்து ஓடிய செவிலியர்கள்- முன்விரோதத்தால் அரங்கேறிய கொடூரம்

மேலும், “ கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில், அவர்கள் உறவினர்கள் கூட செல்லாமல் ஓடி ஒளிந்த காலத்தில், கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தங்களது உயிரையும் துச்சமாக மதித்து, அவர்களை காப்பாற்றியவர்கள் மருத்துவர்கள்.

எனவே, மருத்துவர்கள் என்ன குறை, குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது என்று எனது சார்பாக கேட்டுக் கொள்கிறேன். எப்போதும் மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நான் உடன் இருப்பேன்" என்றார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Doctor, KN Nerhu, Trichy