ஹோம் /நியூஸ் /திருச்சி /

சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் கே.என்.நேரு..!

சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் கே.என்.நேரு..!

ஜெயக்குமார் - கே.என்.நேரு

ஜெயக்குமார் - கே.என்.நேரு

அடுத்த ஒரே ஆண்டில் இந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli | Tamil Nadu

    சாயம் போகாத கட்சி திமுக என்பதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்ப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் - கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகைப் பயன்பாட்டு மையம் சுமார் 349.98 கோடி மதீப்பீடில் அமைக்கும் திட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

    திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தங்கு தடையின்றி வந்து செல்லும் வகையில் இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் செயல்பட உள்ளது. இந்த நிலையில் இதற்கான கட்டுமானப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று பஞ்சப்பூரில் துவக்கி வைத்தார்.

    பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாகவே துவக்கப்பட்டது. அதே போல்,  கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த பேருந்து முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க | என்ன பழக்கம் இது.. சட்டென கோபமாக கத்திய கனிமொழி.. வைரலாகும் வீடியோ..!

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, அடுத்த ஒரே ஆண்டில் இந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அண்ணா சாலை முதல் ஜங்சன் வரை 966 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், மழைக்காலங்களில் திமுகவின் சாயம் வெளுக்கிறது என்று ஜெயக்குமார் கூறியதற்கு பதிலளித்த அவர், சாயம் போகாத கட்சி திமுக என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும், ஓராண்டில் எவ்வளவு கோடி ஒதுக்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்பதனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கூறினார்.

    செய்தியாளர்: கோவிந்தராஜ், திருச்சி.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: DMK, KN Nerhu, Minister Jayakumar, Minister Jeyakumar, Trichy