ஹோம் /நியூஸ் /திருச்சி /

ஹீலியம் சிலிண்டர் விபத்து: சிறுவனின் மேல் சிகிச்சைக்கு உதவிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஹீலியம் சிலிண்டர் விபத்து: சிறுவனின் மேல் சிகிச்சைக்கு உதவிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

மேல் சிகிச்சை செய்தால் தான் தனது மகனை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அதற்கு முதலமைச்சர் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சியில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில், படுகாயம் அடைந்த சிறுவனை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

  கடந்த அக்டோபர் 2ஆம் தேதி திருச்சி மேலரண் சாலையில் உள்ள பிரபல ஜவுளி கடை முன்பாக இருசக்கர வாகனத்தில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வைத்து உத்தர பிரதேசம் பகுதியை சேர்ந்த அனார்சிங் என்பவர் பலூன் வியாபாரம் செய்துள்ளார்.

  அப்போது கரூர் சின்ன தாராபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்கிற மாட்டு ரவி(35) என்ற நபரை சிறிது நேரம் பார்த்துகொள்ள சொல்லிவிட்டு தண்ணீர் பிடிப்பதற்காக வெளியே சென்று உள்ளார். அப்பொழுது திடீரென பெரும் சத்தத்துடன் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டது. ரவி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

  இந்த விபத்தில் 9ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன் ஜீவானந்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  அவருக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு இடது கண் பகுதி முழுவதுமாக காயம் அடைந்து பார்வை இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகிறார். மேலும் ஜீவானந்தத்தின் சிறுகுடல் முழுவதுமாக பாதிக்கப்பட்டு தற்பொழுது பெருங்குடல் பகுதியை வெளியே வைத்து ஒட்டி அதன் மூலம் மலம் கழிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் மிகுந்த மன வேதனையுடன் தொடர்ந்து மிகுந்த சிரமத்துடன் சிறுவன் இருந்து வருகிறான்.

  இதையும் வாசிக்க: "ஒற்றை ஓநாய் தாக்குதல்" முறையில் கோவை கார் வெடிப்பு சம்பவம்: - தமிழ்நாடு காவல்துறை தகவல் 

  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது தாயார், மேல் சிகிச்சை செய்தால் தான் தனது மகனை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அதற்கு முதலமைச்சர் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

  இந்நிலையில், இது குறித்து  திருச்சியில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, மேல் சிகிச்சைக்காக சிறுவனின் தாயாரிடம் தானே பேசி ஆம்புலன்ஸ் வாயிலாக சிறுவனை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் சென்னையில் சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் தானே செய்து தருவேன் எனவும் உறுதியளித்ததாக தெரிவித்தார்.

  செய்தியாளர்: கோவிந்தராஜ், திருச்சி

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Accident, Trichy