ஹோம் /நியூஸ் /திருச்சி /

பால் வாங்க வந்த 6ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.. கடைக்காரர் மீது பாய்ந்தது போக்சோ..!

பால் வாங்க வந்த 6ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.. கடைக்காரர் மீது பாய்ந்தது போக்சோ..!

பால் வியாபாரி

பால் வியாபாரி

Trichy | சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாகியுள்ள எழிலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli | Tamil Nadu

திருச்சியில், 6ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பால் கடை உரிமையாளர் மீது போக்சோ வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் மாணவி, அவரது  குடியிருப்பு பகுதியில் உள்ள பால் கடைக்கு பால் பாக்கெட் வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது, அந்த பால் கடையின் உரிமையாளர் எழிலன் (47) மட்டும் தனியாக இருந்துள்ளார். அதிகாலை நேரம் என்பதால் அந்தப் பகுதியில் ஆட்கள் நடமாட்டமும் குறைவாக இருந்துள்ளது.

Also read | பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை - அதிர்ச்சி சம்பவம்

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எழிலன், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி, வீட்டிற்கு ஓடி சென்று அவரது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.  இதனை அறிந்த பால் வியாபாரி உடனடியாக தலைமறைவாகியுள்ளார்.

தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்,

திருவெறும்பூர் போலீசார், எழிலன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள எழிலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Child Abuse, Crime News, Pocso, POCSO case, Sexual abuse