வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த பிரத்தேக பேட்டியில், “திருச்சி மாவட்டத்தில், பீகார் உட்பட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த 3,000 பேர் தங்கி வேலை செய்கின்றனர். திருச்சி மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். எனவே அவர்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.
இருப்பினும் ஏதாவது உதவி தேவைப்படும் வட மாநில தொழிலாளர்கள் 94981 81325 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். வடமாநில தொழிலாளர்கள் குறித்து ஏதாவது வதந்தி பரப்பினால், வதந்தி பரப்புவோர் மீது தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
செய்தியாளர் : விஜயகோபால் - திருச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Migrant Workers, Trichy