Home /News /trichy /

மேட்டூர் அணை திறந்து 48 நாட்களாகியும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை... விவசாயிகள் புகார் மனு...

மேட்டூர் அணை திறந்து 48 நாட்களாகியும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை... விவசாயிகள் புகார் மனு...

காவிரி ஆற்றின் நீர் கடைமடைக்கு வரவில்லை - விவசாயிகள் புகார்

காவிரி ஆற்றின் நீர் கடைமடைக்கு வரவில்லை - விவசாயிகள் புகார்

Cauvery River : "கடந்த, 48 நாட்களுக்கு முன் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் இன்னும் கடைமடைக்கு சென்று சேரவில்லை" என்று பொதுப் பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் புகார் கொடுத்தனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, மாநிலத் துணைத் தலைவர் மேகநாதன் மற்றும் விவசாயிகள், திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) ராமமூர்த்தியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், 'மேட்டூர் அணையிலிருந்து காவிரியில், 15,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு, 48 நாட்கள் ஆகின்றன. ஆனால், திருச்சி மாவட்டம்  முசிறி தாலுகாவில் மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், கட்டளை வாய்க்கால், வடகரை வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கு இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை.

Also see... தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 5% மட்டுமே.. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுமா?

இதனால் விவசாயப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. அதேபோன்று, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மருதாண்டாகுறிச்சி வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. அனைத்து பகுதிகளுக்கும், கடைமடை வரை தண்ணீர் சென்றடைய, 25,000 கன அடி நீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது,. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியிருக்கிறது,. காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக தொடர்கிறது.

கே.ஆர்.எஸ், கபினி அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து நீர் வெளியேற்றப்பட்டதும் அதிக நீர் வரத்திற்கு காரணமாகும். மேட்டூர் ஆணை வரலாற்றில் 68வது முறையாக அணை 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cauvery River, Farmer, Mettur

அடுத்த செய்தி