Home /News /trichy /

திருச்சி சாலையில் திடீரென ஏற்பட்ட ‘மெகா’ பள்ளம்... கடும் துர்நாற்றம் - பரபரப்பு

திருச்சி சாலையில் திடீரென ஏற்பட்ட ‘மெகா’ பள்ளம்... கடும் துர்நாற்றம் - பரபரப்பு

மெகா பள்ளம்

மெகா பள்ளம்

Trichy : திருச்சி மாவட்ட ஆட்சியர் வசிக்கும் சாலையில் திடீரென ஏற்பட்ட மெகா பள்ளத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகரப் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் இருந்து கழிவு நீர், பாதாளச் சாக்கடை இணைப்புகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இவை அனைத்தும் பிரதான குழாய்க்கு (மெயின் லைன்) வந்து, ஸ்ரீரங்கம், சங்கிலியாண்டபுரம், கே.கே. நகர், பூக்கொல்லை, ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியில் உள்ள கழிவு நீரேற்று உந்து நிலையங்களுக்கு வந்து சேர்கிறது.

அங்கிருந்து கழிவுநீர் உந்தப்பட்டு (பம்பிங் செய்யப்பட்டு) அண்ணா விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள கழிவு நீரேற்றகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பஞ்சப்பூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் வசிக்கும் வீடு அமைந்துள்ள காஜாமலை காலனி பிரதான சாலையில் நேற்றிரவு திடீர் பள்ளம் ஏற்பட்டது. சுமார், 10 அடி ஆழத்திற்கு, 15 அடி நீளத்திற்கு ஏற்பட்ட இந்த 'மெகா' பள்ளத்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளத்தில் இருந்து வழிந்தோடிய கழிவுநீரால் ஏற்பட்ட கடும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பஞ்சப்பூர் செல்கின்ற பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு தான், 'மெகா' பள்ளத்திற்கு காரணம் என்பது தெரிய வந்தது.

Must Read : மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் பேனா எதற்கு? - செல்லூர் ராஜூ கேள்வி

அதையடுத்து, 'குழாயில் ஏற்பட்ட உடைப்பையும், பள்ளத்தையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க' ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் பிரதான குழாய் உடைப்பு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Published by:Suresh V
First published:

Tags: Tamil News, Trichy

அடுத்த செய்தி