Home /News /trichy /

திருச்சியில் கண்டறியப்பட்ட அரியவகை லூனா அந்துப்பூச்சி - பொதுமக்கள் வியப்பு!

திருச்சியில் கண்டறியப்பட்ட அரியவகை லூனா அந்துப்பூச்சி - பொதுமக்கள் வியப்பு!

லூனா அந்துப்பூச்சி

லூனா அந்துப்பூச்சி

கடந்த, 2012ம் ஆண்டு, 2015ம் ஆண்டுக்கு பிறகு, 2022ம் ஆண்டு தான் லூனா அந்துப்பூச்சி தென்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tamil Nadu
திருச்சியில், 'Indian moon moth' என்றழைக்கப்படும் லூனா அந்துப்பூச்சி  கண்டறியப்பட்டுள்ளது.

லூனா என்றால் நிலவையும், அதன் இறக்கைகளில் பிறை போன்ற பெரிய கண் வடிவ புள்ளிகள் உள்ளதாலும், இவ்வகை அந்துப்பூச்சிகள் இரவில் மட்டுமே பறப்பதாலும், இவை லூனா அந்துப்பூச்சி (Luna moth) என்று அழைக்கப்படுகின்றன. சாட்டர்னிடே (Saturnidae) குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பட்டுப்புழுதான் அந்துப்பூச்சியாகும்.

இந்தியாவில் சிக்கிம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, இமாச்சல பிரதேசம், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் அந்தமான் தீவுகளிலும், நேபாளம், பூடான், வங்காளம், மியான்மார், இலங்கை, இந்தோனேசியா (போர்னியோ) சீனா, திபெத், ஜப்பான் ஆகிய நாடுகளிலும், மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் இவை காணப்படுகின்றன.

இது இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது. வெளிர் பச்சை நிற இறக்கைகளில் நிலவை போன்ற புள்ளிகள் இருப்பதால் லூனா என்ற பெயர் பெற்றன. இளம் பச்சை நிறத்தில் பெரிய கண் போன்ற புள்ளிகளை இறக்கைகளில் கொண்ட இந்த பூச்சியைப் பார்த்தால் நம் கண்கள் விரிந்து ஆச்சர்யம் அடையும்.

இவற்றின் இறக்கைகள் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளன. இதன் இறக்கையின் நீட்டம், 114 மி.மீ, இறக்கை மாடம், 8ல் இருந்து, 11.5 சென்டிமீட்டர் (3.1-4.5 இன்ச்) ஆகும். அதன் நீளம், 17.78 சென்டிமீட்டர் வரைகூட இருக்கும். இதன் முன் மற்றும் பின் இறக்கைகளின் விளிம்புகள் அடர் சிவந்த வண்ணத்தில் காணப்படுகின்றன.

பெண் அந்துப்பூச்சி சுமார், 200 முட்டைகள் வரை இலையின் அடிப்பாகத்தில் இடும். இவை, 8 முதல், 13 நாட்களுக்கு அடைகாக்கப்படும். நல்ல தட்ப வெப்பநிலையில் அந்துப்பூச்சிகள் அதிகமான முட்டைகளை இடும்.

ALSO READ | ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி விதிகளை மீறி கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது யார்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி…

இந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலரான அசோக சக்கரவர்த்தி, லூனா வகை அந்துப்பூச்சிகளை, திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கலிங்கமுடையான் பட்டியில் கண்டறிந்து பதிவுச் செய்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் 'ஒரு காலத்தில் திருச்சி மாவட்டம் முழுவதும் காணப்பட்ட இவ்வகை அந்துப்பூச்சிகள், தற்போது அரிதான அந்துப்பூச்சியாக மாறிவிட்டன. கடந்த, 2012ம் ஆண்டு, 2015ம் ஆண்டுக்கு பிறகு, 2022ம் ஆண்டு தான் லூனா அந்துப்பூச்சி தென்பட்டுள்ளது.

இவ்வகை அந்துப்பூச்சிகள் அதிகளவு இருப்பது நல்ல சுற்றுச்சூழல் நிலவுவதற்கான அறிகுறி. ஆனால், மனிதர்கள் தொடர்ந்து வனங்களை, மரங்களை அழித்து வருகின்றனர். இதன் காரணமாக, இவ்வகை அந்துப்பூச்சிகள் அரியவகை பூச்சிகளாக மாறிவிட்டன. இவற்றை பாதுகாப்பதற்கு உரிய சூழலை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

 
Published by:Anupriyam K
First published:

Tags: Trichy

அடுத்த செய்தி