சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வரும் 6ஆம் தேதி கும்பாபிஷேகம்.. விழா ஏற்பாடுகள் தீவிரம்..
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வரும் 6ஆம் தேதி கும்பாபிஷேகம்.. விழா ஏற்பாடுகள் தீவிரம்..
சமயபுரம் கோவில்
Samayapuram Temple Kumbabishegam | திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வரும், 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், 'வேண்டுபவருக்கு வேண்டும் வரம் அருளும்' அம்மன் அருள்பாலிக்கும் ஸ்தலமாக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். உலகப் பிரசித்திப் பெற்ற சமயபுரம் கோயிலில், புதிதாக கிழக்கு ராஜகோபுரம், ஏழுநிலைகள் கொண்டு கட்டப்பட்டு, எழிலுடன் பஞ்ச வர்ணம் தீட்டப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், நன்செய் இடையாரை சேர்ந்த பொன்னர் - சங்கர் என்ற இரட்டை சகோதரர்கள் உபயத்தில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கிழக்கு ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் வரும், 6ஆம் தேதி புதன்கிழமை காலை 6.45 முதல் 7.25 மணிக்குள் கடக லக்னத்தில் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவானது, வரும், 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. 4ஆம் தேதி கணபதி ஹோமமும், 5ஆம் தேதி இரண்டாம் கால யாகபூஜையும், 6ஆம் தேதி நான்காம் கால யாகபூஜையும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம், 6ஆம் தேதி காலை, 6.45 மணி முதல், 7.25 மணிக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, யாகசாலை அமைத்தல், வர்ணம் பூசுதல், சாரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் உள்ளது.
கும்பாபிஷேக விழாவில், இந்நாள், முன்னாள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.