Home /News /trichy /

பிடிக்குதோ.. பிடிக்கவில்லையோ.. முதல் முத்தத்தை தவறாமல் கொடுங்கள் - மாணவர்களின் கேள்வியும் கமலின் அதிரடி பதிலும்

பிடிக்குதோ.. பிடிக்கவில்லையோ.. முதல் முத்தத்தை தவறாமல் கொடுங்கள் - மாணவர்களின் கேள்வியும் கமலின் அதிரடி பதிலும்

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கமல் ஹாசன்

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கமல் ஹாசன்

Tiruchirappalli | "பொறியாளர்கள் அனைத்தையும் ஆக்குபவர்களாக இருக்க வேண்டும்; அழிப்பவர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் உருவாக்கும் பொறியாளர்- ஒசாமா பின்லேடன் அழிக்கும் பொறியாளர்" என்று திருச்சி என்ஐடி மாணவர்களிடையே நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT), 'NITTFEST' என்ற பெயரில் கலைநிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

நிகழ்வில், என்ஐடி மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்து கமல்ஹாசன் பேசியதாவது "வெற்றி தோல்வி இரண்டும் எனக்கு ஒன்று தான். வெற்றி பெற்ற படங்களுக்கும் நான் உழைத்துள்ளேன். தோல்வியடைந்த படங்களுக்கும் நான் உழைத்துள்ளேன்.

நான் ஜோக் அடித்து அது உங்களுக்கு புரியவில்லை என்றால் அது உங்களின் தோல்வி. அதற்கு நீங்கள் சிரித்தால் அது நமக்கு வெற்றி. எனக்கு கே.பாலசந்தர் போன்ற நல்ல ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தார்கள். எனக்கு பாடம் சொல்லித் தர சம்பளமும் வழங்கினர்.

நான் ஒரு பெண்ணை காதலிப்பதற்கு, எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடலை தான் பாடினேன். எஸ்.பி.பி., எனக்கு, 200 படங்களுக்கும் மேல் பாடியுள்ளார். அதைவிட, எனது நேரடி தெலுங்குப் படங்கள் அல்லாத அனைத்து படங்களுக்கும் அவரே எனது குரலாக இருந்துள்ளார்.

கவிஞர் வாலி பிறரின் பலத்தை வாங்கி கொள்பவர். பிறர் மனம் புண்படாதபடி பேசக்கூடியவர். இவர்களை போன்றோரால் நானும் கவிஞனாகும் தகுதியை பெற்றேன். எனது மூத்தவர்களான, எஸ்.பி.பி, இளையராஜா போன்றோரை நான் நண்பர்கள் என நினைத்து கொண்டேன். ஆனால், அவர்கள் அனைவரும் என் குருமார்கள்.



புது சினிமா தொழில்நுட்பம்

அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான, 5 புத்தகங்களை என்னால் பரிந்துரைக்க முடியாது. ஏனென்றால், இன்றுவரை நான் படித்த புத்தகங்களில் ஐந்து சிறந்த புத்தகங்களாக இருக்கலாம். ஆனால், நாளை வேறு ஐந்து புத்தகங்களை படித்தால் அவை அதைவிட சிறப்பானதாக இருக்க கூடும்.

ஒருவருக்கு, 5 ரூபாய் சம்பளம் வேண்டுமா? 50,000 ரூபாய் சம்பளம் வேண்டுமா? என கேட்டால் எல்லோரும், 50,000 ரூபாய் சம்பளம் தான் வேண்டும் என்பார்கள். அது போல தான், 5 புத்தகங்கள் மட்டுமல்ல. பல புத்தகங்களை படிக்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் சினிமாவின் எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது நான், 'திரையரங்குகள் இருக்கும்; ஆனால் அது கோலோச்சாது. தொலைக்காட்சிகள் வரும். ஆனால் திரை (ஸ்கீரின்) கூட இல்லாமல் ஆகும்' என்றேன்.

அது தற்போது நடக்கிறது. இன்னும் விரைவில் நானோ தொழில்நுட்பத்தில் சினிமா பார்க்கும் காலமும் வரும். ஓ.டி.டி., வந்தால் திரையரங்கு அழிந்து விடுமா? என்று கேட்டால்.. அது இல்லை என்று தான் கூற வேண்டும். தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் தற்போது இருக்கும் திரையரங்கு உள்ளிட்டவையும் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கும்.

என்னதான் ஏ.சி., வந்தாலும் இயற்கையான குளிர்ச்சியான காற்றை நாம் சுவாசித்து கொண்டு தான் இருக்கிறோம். அது போல தான் இதுவும். நடனமாக இருந்தாலும் சரி. பொறியியலாக இருந்தாலும் சரி. கட்டாயம் பயிற்சி அவசியம். தேவர் மகன் படத்தை ஒரு வாரத்தில் எழுதினேன். அதற்கு காரணம் பயிற்சி தான். ஒரு துறையில் சாதிக்க  கடுமையான பயிற்சி அவசியம்" என்றார்.



முதல் முத்தம்

தொடர்ந்து, அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த கமல்ஹாசன், "அரசியல் என்பது உங்களது கடமை. அது தொழில் அல்ல. வாக்கு அளிக்க வயது வந்தும் உங்களில் பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் கூட சேர்க்காமல் இருக்கின்றீர்கள்.

முதலில், வாக்களிக்க வயது வந்தால், வாக்காளர் பட்டியலில் பெயரை சேருங்கள். வாக்களிப்பது ஜனநாயக கடமை. ஜனநாயக கடமையாற்ற இல்லை என்றால் கேள்வி கேட்க உங்களுக்கு அருகதை இல்லை என்று அர்த்தம்.

ஜனநாயகத்தை நாம் விழிப்போடு பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நம் கடமையை நாம் செய்யவில்லையென்றால் ஜனநாயகம் என்று நாம் நம்பி கொண்டிருக்கும் பலம், திருடர்கள் கையில் தான் இருக்கும். தேர்தலில் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு கொடுக்கும் முதல் முத்தம்.

அந்த முத்தம் கொடுத்தால் தான் ஜனநாயகத்துடன் குடும்பம் நடத்த முடியும். எனவே, பிடிக்குதோ.. பிடிக்கவில்லையோ.. முதல் முத்தத்தை தவறாமல் கொடுங்கள். அனைவரும் வாக்களியுங்கள்" என்றார்.



Also see... டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் ரோஜர் ஃபெடரர் ஓய்வு..!

ஒசாமா பின்லேடன்

இறுதியாக பேசிய அவர், "அனைவரும் பொறியியல் படித்து வருகின்றீர்கள். நீங்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான பொறியாளராக உருவாக வேண்டும். பின்லேடனும் ஒரு பொறியாளர் தான். ஆனால் அவர் ஒரு அழிக்கும் பொறியாளர். அது போல் நம் கல்வி இருக்க கூடாது. நீங்கள் கற்பது ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு பயன்பட வேண்டும். வறுமை, ஏழ்மையை ஒழித்து, புதிய இந்தியாவை படைக்க பொறியாளர்கள் முன்வர வேண்டும்" என்றார்.இந்நிகழ்ச்சியில், என்.ஐ.டி., இயக்குனர் அகிலா, பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Kamal Haasan, NIT, Trichy

அடுத்த செய்தி