திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தப்பாரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணி தொடங்கி மாலை 4.20 மணிக்கு முடிந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை திருச்சி ஆர்.டி.ஓ. தவச்செல்வம் தொடங்கி வைத்தார். இதில் திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், பேரூராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 835 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்துகொண்டன. இதில் 4 மாடுகள் நிராகரிக்கப்பட்டது. மேலும், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், முதலாவதாக முனியாண்டவர் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதன்பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
தொடர்ந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், வீரத்துடனும் பிடித்து பரிசுகளை தட்டிச் சென்றனர். பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 16 காளைகளை அடக்கிய கூத்தைப்பாரை சேர்ந்த மனோஜ் முதல் பரிசாக பிரிட்ஜ், 12 மாடுகளை அடக்கிய பழங்கனாங்குடியைச் சேர்ந்த ஹரிக்கு 2ம் பரிசாக வாஷிங் மெஷினும், நவல்பட்டுவை சேர்ந்த கலை, கீழக்கண்டார் கோட்டை சேர்ந்த கிருபாகரன் ஆகியோர் தல 10 மாடுகளை அடக்கி 3வது இடத்தையும் பெற்றனர்.
இவர்களுக்கு ஒருவருக்கு ஏர்கூலரும், மற்றொருவருக்கு ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. இதனிடையே, மாடு பாய்ந்ததில் சோம்பரசம்பேட்டை காவல் நிலைய எஸ்எஸ்ஐ பெரியசாமி, மாடுபிடி வீரார்கள் காட்டூரை சேர்ந்த சூர்யா (20), புதுகுடியை சேர்ந்த ராஜசேகரன் (19), மஞ்சத்தடலை சேர்ந்த மகேஸ்வரன் (18), கிழக்குறிச்சி வசந்தநகர் விலங்குகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன் (36) பூலாங்குடியை சேர்ந்த மஞ்சுளா(55) உட்பட சுமார் 30 பேர் காயமடைந்தனர். இவர்களில் 9 பேர் மாடுபிடி வீரர், 13 பேர் மாட்டின் உரிமையாளர்கள், ஒருவர் விழா கமிட்டியினர், ஒருவர் போலீஸ்காரர், ஒரு விலங்கு நல ஆர்வலர், ஒரு பெண் உட்பட பார்வையாளர் 4 பேர் அடங்குவர்.
இவர்களில் மாடுபிடி வீரர்கள் சூர்யா, ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி ஏடிஎஸ்பி குத்தலிங்கம் தலைமையில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் உட்பட 353 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
செய்தியாளர் : கோவிந்தராஜ் - திருச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jallikattu, Local News, Trichy