கேரளாவில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, திருச்சி சிறப்பு முகாமில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சியும், அதன் தொடர்ச்சியாக மக்களிடம் ஏற்பட்ட எழுச்சி காரணமாகவும் அந்நாட்டின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோடும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார். இலங்கை மக்கள் புரட்சியின் பின்னணியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அவ்வப்போது அரசல்புரலாக செய்திகள் வெளியாகின.
அவற்றை எல்லாம் நாடு கடந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் மறுத்து வந்தனர். இந்நிலையில், கேரளாவில் விடுதலைப்புலிகள் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதும், இச்சம்பவம் தொடர்பாக, திருச்சியில் என்.ஐ.ஏ., (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையும் தமிழீழ ஆதரவாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து என்ஐஏ, வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த, 2021ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சின் அருகே விழிஞ்சம் அரபிக்கடல் பகுதியில் இந்திய கடலோரக் காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு படகை மடக்கி பிடித்து, அதிலிருந்த, 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 5 ஏ.கே-45 ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்களை இலங்கை தமிழர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
இதுதொடர்பாக, கடந்த, 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி, கேரளா மற்றும் தமிழகத்தில் விரிவான சோதனையை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்தினர். அந்த சோதனையில், விடுதலைப்புலிகள் இயக்கம் சார்ந்த ஏராளமான ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், 7 மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைச் செய்யப்பட்ட இயக்கம் என்பதால் இவ்வழக்கை என்ஐஏ, தீவிரமாக விசாரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, இன்று திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் என்ஐஏ, அதிகாரிகள் காலை முதலே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், சிங்களவர்கள், பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Must Read : தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடல் - RTI அதிர்ச்சித் தகவல்
அவர்களுக்கு பாதுகாப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட, துணை ராணுப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முற்றிலுமாக அழிந்து விட்டதாக கருதப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக, திருச்சியில் என்ஐஏ, அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.