Home /News /trichy /

விஜய் பட பாணியில் தமிழ்நாடு கடனை அடைக்க முயன்ற திருச்சி இளைஞர்

விஜய் பட பாணியில் தமிழ்நாடு கடனை அடைக்க முயன்ற திருச்சி இளைஞர்

திருச்சி இளைஞர்

திருச்சி இளைஞர்

இளைஞர் ஒருவர் தமிழன்பட பாணியில், தமிழகத்தின் கடனை அடைப்பதற்காக தன்னுடைய பங்காக 90 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பி வைத்து அதிரடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    நடிகர் விஜய் 'தமிழன்' என்ற திரைப்படத்தில் 'சூர்யா' என்ற பெயரில் வழக்கறிஞராக நடித்திருப்பார். அநீதிகளை தட்டிக் கேட்கும் கதாபாத்திரமாக அப்படத்தில் நடித்த விஜய், இந்தியா வாங்கிய வெளிநாட்டு கடனை அடைப்பதற்கு தன்னுடைய பங்கான ஒரு தொகையை பிரதமரின் நிவாரண நிதிக்கு விஜய் அனுப்பி வைப்பார். இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் இந்த காட்சி, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், திருச்சியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் தமிழன்பட பாணியில், தமிழகத்தின் கடனை அடைப்பதற்காக தன்னுடைய பங்காக, ரூ.90,000 தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பி வைத்து அதிரடித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை ஒரு விவசாயி. இவரது மகன் சின்னராஜா. இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது.தற்போது, சவூதி அரேபியாவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். பொருளாதாரம் குறித்த படிப்பையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த, மார்ச் மாதம் 2022ல் நடந்த, தமிழக பட்ஜெட்(2022-2023) அறிக்கையை செய்தி மூலம் அறிந்திருக்கிறார்.

    அதில், மார்ச் 31, 2023 நிலவரப்படி, தமிழக அரசின் கடன், ரூ.6,53,348.73 கோடியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7,21,47,030.

    மார்ச் 31,2023 நிலவரப்படி, ஒவ்வொரு தமிழனின் மீது  உள்ள தமிழக அரசின் கடன், 6,53,348.73 கோடி ரூபாயாக உள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையை கடன் தொகையுடன் வகுத்தால், தனி நபர் ஒருவருக்கு கடன் ரூ.90,558.00ஆக வருகிறது. இதன் காரணமாக வருத்தமடைந்த சின்னராஜா, தனது பங்களிப்பைச் செலுத்த முடிவு செய்தார். கடந்த ஆறு மாதமாக அவர் சேமித்து வைத்த ரூ.90,558 முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: “மின்கட்டண உயர்வு.. வேறு வழியில்லை" - தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்

    இதுகுறித்து சின்னராஜா கூறும்போது, "தமிழக அரசின் கடனை செலுத்துவதற்காக எனது பங்களிப்பை செலுத்தியுள்ளேன்.
    தமிழ்நாடு ஒரு குடும்பம், இக் குடும்பத்தில் பிறந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கடன் இல்லாத தமிழகம் அமைய எல்லோரும் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இவரது பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து, நிதித்துறை இணைச் செயலாளர் சின்னராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Loan, Tamil Nadu govt, Trichy

    அடுத்த செய்தி