ஹோம் /நியூஸ் /திருச்சி /

மனைவியுடன் கள்ளக்காதல்.. கண்டித்தும் கேட்காத ஆட்டோ ஓட்டுநர் கழுத்துறுத்து கொலை - முன்னாள் எம்.எல்.ஏவின் தம்பி கைது

மனைவியுடன் கள்ளக்காதல்.. கண்டித்தும் கேட்காத ஆட்டோ ஓட்டுநர் கழுத்துறுத்து கொலை - முன்னாள் எம்.எல்.ஏவின் தம்பி கைது

ஆட்டோ டிரைவர் கொலை

ஆட்டோ டிரைவர் கொலை

Crime News: ஜாமினில் வெளிவந்த புல்லட் ராஜா ஆட்டோ ஓட்டுநர் சின்னராசுவும் தனது மனைவி கிருஷ்ணவேணிக்கும் இடையேயான கள்ளக்காதலை அறிந்து கண்டித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த வழக்கில் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனின் தம்பி புல்லட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சின்னராசு. கடந்த சனிக்கிழமை இரவு சமயபுரம் கோயிலில் முடி காணிக்கை செலுத்தும் பகுதிக்கு அருகே குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீஸார் சின்னராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  விசாரணையில் மண்ணச்சநல்லூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனின் தம்பி புல்லட் ராஜா இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.  கடந்த ஜனவரி மாதம் லாரி உரிமையாளர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைதான  புல்லட் ராஜாவை  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ்  போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

  Also Read:  ஆசை காதலனுக்கு ஆசிட் கலந்த ஜூஸ் கொடுத்த காதலி - இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்

  திருச்சி மத்திய சிறையில் இருக்கும் புல்லட் ராஜாவை பார்க்க அவரது மனைவி கிருஷ்ணவேணி அடிக்கடி ஆட்டோவில் சென்று வந்துள்ளார். ஆட்டோவில் செல்லும்போது மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னராசுவுக்கும்  கிருஷ்ணவேணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

  அண்மையில் ஜாமினில் வெளிவந்த புல்லட் ராஜா ஆட்டோ ஓட்டுநர் சின்னராசுவும் தனது மனைவி கிருஷ்ணவேணிக்கும் இடையேயான கள்ளக்காதலை அறிந்து கண்டித்துள்ளார். ராஜாவின் கண்டிப்பை இருவரும் பொருட்படுத்தாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு சின்னராசு தனது ஆட்டோவில் கிருஷ்ணவேணி ஏற்றுக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

  ஆட்டோவை கோயில் வளாகமான முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர்   சின்னராசுவை கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

  இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சின்ன ராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக எம்எல்ஏவின் தம்பி புல்லட் ராஜா உள்ளிட்டோரை தேடி வந்தனர். இந்நிலையில் இக்கொலை தொடா்பாக அளித்த புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த ராஜா (எ) புல்லட் ராஜா (41), இவரது நண்பா்களான சமயபுரம் ஷேக் அப்துல்லா (42), அப்துல் கனி (26) ஆகியோரை சமயபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: கோவிந்தராஜ் ( திருச்சி) 

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Illegal affair, Illegal relationship, Murder, Tamil News