ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சி மாநகரத்தில் வெளுத்துகட்டிய நடுநிசி மழை!

திருச்சி மாநகரத்தில் வெளுத்துகட்டிய நடுநிசி மழை!

கனமழை - திருச்சி

கனமழை - திருச்சி

Tiruchirappalli | திருச்சி மாநகரத்தில் நேற்று ஒரே நாள் இரவில், 169 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும், 1,307 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று இரவு, 11 மணியளவில் துவங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால், மாநகரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.  ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. குறிப்பாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையம் வெள்ள நீரால் சூழப்பட்டது.

செல்வா நகர் பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்தது. நள்ளிரவு மழையால் வீட்டுக்குள் இருக்க முடியாமலும், வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும் மக்கள் தவித்தனர்.

நேற்றிரவு முதல், இன்று காலை 8 மணி வரை, திருச்சி மாநகரத்தில், 169 மில்லி மீட்டர், திருச்சி பொன்மலை, ரயில் நிலைய சந்திப்பு பகுதியில் 114 மிமீ, விமான நிலையப் பகுதியில் 93.30 மி.மீ., என மாவட்டம் முழுவதும் நேற்றிரவு மட்டும் மொத்தம் 1,307 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.

Also see... குற்றங்களை தடுக்க நடவடிக்கையை வேகப்படுத்துங்கள் : தமிழக காவல்துறைக்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ்!

இதனால், காலையில் மழை விட்ட பிறகும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Heavy Rainfall, Trichy