திருச்சி சுங்கச் சாவடியில் சசிகலா காரின் கண்ணாடி மீது தானியங்கி தடுப்பு விழுந்து கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், ஆதரவாளர்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுக்குழு விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, சசிகலா தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, சசிகலா நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருச்சி வழியாக காரில் தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை, 2 மணியளவில், திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடியில் அவர் கார் கடந்த போது, தானியங்கி தடுப்பு காரின் கண்ணாடி மேல் பட்டதால் காரின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சசிகலா, தனது காரை விட்டு இறங்கி சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த சசிகலாவின் ஆதரவாளர்கள், 50க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டதோடு, போக்குவரத்தையும் தடைச் செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்த துவாக்குடி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சப்- இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சுங்கச்சாவடி அதிகாரிகளும் 'எதிர்பாராத விதமாக நடந்து விட்டதாக' கூறி சமாதானம் செய்தனர். அதையடுத்து, சசிகலாவும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
பாஸ்ட் டேக் இல்லை?
இச்சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, 'பொதுவாக இந்த சுங்கச்சாவடியில் வரும் விஐபிக்கள் அனைவரும், 11ம் எண் வாசல் வழியாக அனுப்பி வைத்து விடுவார்கள்.
ஆனால் சசிகலா அந்த வழியாக செல்லவில்லை. கட்டணம் செலுத்தும் வழியாக வந்ததால், தானியங்கி தடுப்பு கண்ணாடி மீது லேசாக பட்டுள்ளது.
இதற்கு, சசிகலாவின் காரில் இருந்த FAST TAG ஸ்டிக்கரில் ரீசார்ஜ் செய்யாதது தான், தானியங்கி தடுப்பு கீழே இறங்கியதற்கு காரணம்' என்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sasikala, Toll gate, Toll Plaza, Trichy, VK Sasikala