ஹோம் /நியூஸ் /திருச்சி /

பிச்சை எடுப்பதற்காக  திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகள் 

பிச்சை எடுப்பதற்காக  திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகள் 

பிச்சை எடுப்பதற்காக  திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகள் 

பிச்சை எடுப்பதற்காக  திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகள் 

Tiruchirappalli | உலகிலேயே பணக்காரக் கோயில் எதுவென்று கேட்டால், யாராக இருந்தாலும் பட்டென்று சொல்லிவிடுவார்கள் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் என்று ஏனென்றால், திருப்பதி கோயில் உண்டியலில் குவியும் ஒருநாள் காணிக்கையே பல கோடிகளை எட்டும். அப்படி பணக்கார கோயிலாக திருப்பதி இருக்க, அங்கிருந்து ஸ்ரீரங்கம் வந்து பிச்சையெடுக்கின்றனர் சில மாற்றுத் திறனாளிகள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் கால் செயலற்ற மாற்றுத்திறனாளி பூபதி . இவரது பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் என்றாலும், தனது சிறு வயதிலேயே திருப்பதிக்கு சென்று விட்டார். அங்கு முதலில் பிச்சையெடுத்து பிழைத்தாலும், தற்போது அங்கு சிறிய பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரைப் போலவே உள்ள மாற்றுத் திறனாளிகளுடன் இணைந்து ஒரு அமைப்பையும் நடத்தி வருகிறார்.

இந்த அமைப்பு மூலம் உரிய உதவிகள் பெற்று, பூபதி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும், அவர்களால் முடிந்த தொழில்களை செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு தவறாமல் வருகை தந்துவிடுகின்றனர்.

மக்கள் வெள்ளம்

புரட்டாசி மாதம் வரும் மகாளயபட்ச அமாவாசை, வழக்கமான அமாவாசை தினங்களை விட மிக சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. அன்றைய தினம், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், திருச்சி ஸ்ரீரங்கம்  அம்மா மண்டபம் படித்துறையில் ஒன்று திரள்வார்கள்.

அம்மா மண்டபம் வாயிலில் பிச்சையெடுப்பவர்களுக்கு காசு, பணம் கொடுப்பதுடன், உணவும் வாங்கி கொடுப்பார்கள். இவர்களை குறி வைத்தே, ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த பூபதி மற்றும் அவரது குழுவை சேர்ந்த ஏழு பேர் ஸ்ரீரங்கம் வந்துள்ளனர்.

அதிகாலை முதல், மாலை வரை நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து பூபதியிடம் கேட்டபோது,"ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதியில் இருந்து, ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஏறி ஸ்ரீரங்கம் வந்துவிடுவோம்.

எங்கள் அனைவருக்கும் இலவச ரயில் பாஸ் இருக்கிறது. அம்மா மண்டபத்தில் வந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிச்சை எடுப்போம். கடைசியாக சேர்ந்துள்ள பணத்தை மொத்தமாக எண்ணி, அனைவரும் பங்கிட்டுக் கொள்வோம்.

ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம், 1,000 ரூபாய் முதல், அதிகபட்சம், 1,500 ரூபாய் வரை கிடைக்கும். அதன்பிறகு, காவிரியில் நீராடி, திதி, தர்ப்பணம் கொடுத்துவிட்டு, இரவோடு இரவாக ஊர் திரும்பி விடுவோம்" என்றார்.

Also see... உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது..!

பணக்கார கோயிலாக திருப்பதி இருந்தாலும், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்கும் கோயிலாக ஸ்ரீரங்கம் விளங்குகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது..

Published by:Vaijayanthi S
First published:

Tags: Begger, Mahalaya Amavasai, Srirangam, Trichy