முகப்பு /செய்தி /திருச்சி / அதிமுக நிர்வாகி வீட்டில் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகள் - திருச்சியில் பரபரப்பு

அதிமுக நிர்வாகி வீட்டில் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகள் - திருச்சியில் பரபரப்பு

கையெறி குண்டுகள்

கையெறி குண்டுகள்

Trichy district News : திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக நிர்வாகி வீட்டில் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாநகரம் அரியமங்கலம் திடீர்நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கேபிள் சேகர் (எ) பன்றி சேகர். முன்னாள் அதிமுக பகுதிச் செயலாளர். இவரது மனைவி கயல்விழி, மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர். இவர்களது மகன் முத்துக்குமார் (வயது 29). இவர் வீட்டிலேயே வெடிகுண்டுகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருச்சி தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி, பொன்மலை உதவி ஆணையர் காமராஜ், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஆய்வாளர் எட்வர்டு, தடய அறிவியல் துறை ஆய்வாளர் ராஜேந்திரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி, காவலர் ஜாகிர் உசேன் ஆகியோர் முத்துக்குமார் வீட்டை சோதனையிட்டனர்.

மேலும் அவர், பன்றி பண்ணை வைத்திருக்கும் குமரன் நகர் ஓட்டுவளை வீட்டிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கே 3 கிலோ எடை கொண்ட  இரண்டு பால்ரஸ் குண்டுகளை கைப்பற்றினர். அதனுடன் பட்டாசு வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.பரிசோதனைக்கு பின்னர் வெடிகுண்டுகள் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த ஒரு கையெறி குண்டை வீசி, ஒருவரை கொலை செய்து விட முடியும். வாகனங்களில் செல்பவர்களை நிலைகுலைந்து போக செய்ய முடியும். எனவே, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெடிகுண்டுகளை தயாரித்த முத்துக்குமார் மீது அரியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கைது செய்யப்பட்ட முத்துக்குமார்

கைதான முத்துக்குமார் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, கீழ அம்பிகாபுரம் காவிரி நகரை சேர்ந்த சரவணன், குட்ட பாலு, கணேசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Must Read : பள்ளி மாணவர்களுக்கு போதை உணர்வு தரும் மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை.. மதுரையில் மருந்தக உரிமையாளர் கைது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமாரின் வீட்டில் வெடிகுண்டுகள் வெடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இங்குள்ள பன்றி பண்ணையில் முத்துக்குமார் தலைமையில் பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவதாக சொல்லப்படுகிறது. குடியிருப்புகளுக்கு மத்தியில் பன்றிகளை வளர்ப்பதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, உடனடியாக பன்றி பண்ணையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: ADMK, Bomb, Trichy