Home /News /trichy /

'சீட்டு' பிடிப்பதற்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு.. அரசுக்கு 2,000 கோடி நஷ்டம் ஏற்படும்.. சிட்பண்ட் உரிமையாளர்கள் எச்சரிக்கை

'சீட்டு' பிடிப்பதற்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு.. அரசுக்கு 2,000 கோடி நஷ்டம் ஏற்படும்.. சிட்பண்ட் உரிமையாளர்கள் எச்சரிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வாடிக்கையாளர்களிடமிருந்து சீட்டு பிடிப்பதன் மூலம் நிறுவனத்திற்கு கிடைக்கக்கூடிய, 5 சதவீத கமிஷன் தொகைக்கு, 12 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

சீட்டு பிடிப்பதற்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதால், தமிழக அரசுக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' என்று சிட்பண்டு உரிமையாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி பிரஸ் கிளப்பில், திருச்சி மாவட்ட பைனான்சியர்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் ஆலோசகர் தங்கவேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் சிட்பண்ட்ஸ் நடத்தக்கூடிய, 2,600 நிறுவனங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

அனைத்து நிறுவனங்களுமே மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் மட்டும், 100 சிட்ஃபண்ட்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர்களிடமிருந்து சீட்டு பிடிப்பதன் மூலம் நிறுவனத்திற்கு கிடைக்கக்கூடிய, 5 சதவீத கமிஷன் தொகைக்கு, 12 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

வருகின்ற, 18ம் தேதி முதல் இந்த ஜிஎஸ்டி வரி உயர்வானது அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே அரசு, 28 லட்சம் ரூபாய் வரை சீட்டு பிடிக்கும் நிறுவனங்களுக்கு வரி எதுவும் செலுத்த தேவையில்லை என்றும், 80 லட்சம் ரூபாய் வரை பாதி வரியை நிர்ணயத்தும், அதற்கு மேல் முழுமையான வரி செலுத்த வேண்டும் என்றும் அரசு நிர்ணயித்து இருந்தது. ஆனால் தற்போது தடாலடியாக, 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், சீட்டு பிடிக்கும் வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, ஜிஎஸ்டி வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

எங்களை போன்ற சிறிய சிட்பண்டு நிறுவனங்கள், வங்கிகளைப் போல செயல்பட வேண்டுமென்றால், 100 கோடி ரூபாய் முதலீடு தேவை. ஆனால், அந்த அளவிற்கு எங்களால் முதலீடு செய்ய முடியாது.

பெரும்பாலான நிறுவனங்கள் சுமார் மூன்று கோடி ரூபாய் என்ற அளவிலேயே சீட்டுகளை பிடித்து வருகிறோம். தமிழகத்தில் மட்டும் சிட் பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு, 2,000 கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. இந்த ஜிஎஸ்டி வரி உயர்வால் பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

பேட்டியின் போது, சங்கத் தலைவர் வேணுகோபால், செயலாளர் பழனியப்பன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: GST

அடுத்த செய்தி