திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியம முறையில் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.01.2023ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுனர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 1
மாத சம்பளம் : ரூ.19,500 – 62,000
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.01.2023 மாலை 5.45 மணிவரை.
தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது: இந்த பணிக்கு 01.07.2022 அன்று 18 வயது முதல் 42 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை : இந்தப் பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2022/12/2022121242.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு), 3 ஆவது தளம், திருச்சி – 620001
Must Read : ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?
இந்த விவரங்களை https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2022/12/2022121242.pdf என்ற இணையதளப் பக்கத்தில் தெரிந்துள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Government jobs, Local News, Trichy