ஹோம் /நியூஸ் /திருச்சி /

அரசு வேலை வாங்கித்தர்றேன்.. ரூ.80 லட்சத்தை சுருட்டிய மோசடி இளைஞர்.. திருச்சியில் பகீர் சம்பவம்

அரசு வேலை வாங்கித்தர்றேன்.. ரூ.80 லட்சத்தை சுருட்டிய மோசடி இளைஞர்.. திருச்சியில் பகீர் சம்பவம்

ரூ.80 லட்சம் ஏமாற்றிய மோசடி நபர்

ரூ.80 லட்சம் ஏமாற்றிய மோசடி நபர்

Trichy News : திருச்சியில் ஆதார் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி இளைஞர்களிடம் சுமார் ரூ.80 லட்சத்தை சுருட்டிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  ஆதார் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களிடம் ரூ.80 லட்சம் வரை  வாங்கி மோசடி செய்த நபர் மீது பாதிக்கப்பட்டோர் சார்பில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

  திருச்சி மாநகரம் மணல்வாரி துறை சாலை ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் வேல்முருகன் (24). இதே பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டம் பெற்ற பல இளைஞர்கள், அப்பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

  அப்போது கார்த்திக் என்ற பார்த்திபன் என்பவர் அறிமுகம் ஆகி, 'தான் மத்திய அரசில் உள்ள ஆதார் சேவை துறையில் பணியாற்றி வருவதாகவும், தமிழகத்தில் உள்ள அரசு வேலைகளை தன்னால் வாங்கித் தர முடியும்' என்று இளைஞர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

  இதையும் படிங்க : பொள்ளாச்சியில் காட்டு யானைகள் அட்டகாசம்... பசுமாட்டை மிதித்து கொன்ற கொடூரம்!

  அதை நம்பி, 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவரிடம் சுமார், 80 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளனர். அதை பெற்றுக் கொண்ட அவர் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் ஏமாற்றியுள்ளார்.

  இந்நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட வேல்முருகன் உட்பட, 6 இளைஞர்கள், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து தாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர் : விஜயகோபால் - திருச்சி 

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Trichy