முகப்பு /செய்தி /திருச்சி / செல்போனுக்குள் வைத்து 31 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்.. திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய பயணி

செல்போனுக்குள் வைத்து 31 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்.. திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய பயணி

கடத்தப்பட்ட தங்கம்

கடத்தப்பட்ட தங்கம்

திருச்சி விமான நிலையத்தில், 'டேப்லெட் மொபைல் போனில்' வைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகின்ற பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை  சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்து சேர்ந்த 'ஏர் ஏசியா' விமான பயணிகள் மற்றும் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆண் பயணி ஒருவரிடம் இருந்த டேப்லெட் மொபைல் போன் அவர்களுக்கு சந்தேகம் அளிப்பதாக இருந்தது. உடனடியாக, அந்த மொபைல் போனை பிரித்து சோதனை செய்தனர். அப்போது, அந்த போனுக்குள், 360 கிராம் தங்கத்தை செவ்வக வடிவில் தகடுகளாக வைத்து அந்த நபர் நூதன முறையில் கடத்தி வந்தது தெரிய வந்தது.

மேலும் அவரிடம் இருந்து, 179 கிராம் தங்கச் செயினும் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் இருந்து மொத்தமாக சுமார் 539 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் 31 லட்சத்து 62 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. நூதன முறையில் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Gold Robbery, Smuggling, Trichy, Trichy Airport