Home /News /trichy /

Ganesh Chaturthi 2022: உலகப் பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு பிரமாண்ட கொழுக்கட்டை படையல்

Ganesh Chaturthi 2022: உலகப் பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு பிரமாண்ட கொழுக்கட்டை படையல்

Ganesh Chaturthi 2022: உலகப் பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு  பிரமாண்ட கொழுக்கட்டை படையல்

Ganesh Chaturthi 2022 : வரும், 12ஆம் தேதி மதியம், 12 மணியளவில் மாணிக்க விநாயகருக்கு, நூற்றுக்கணக்கான அபிஷேக பொருட்களை கொண்டு மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விநாயகர் சதுர்த்தியையொட்டி, தலா, 75 கிலோ என மொத்தம், 150 கிலோ எடையுள்ள பிரமாண்டமான கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட்டு, மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப் பிள்ளையாருக்கு படைக்கப்பட்டன.

    'தென் கைலாயம்' என்று போற்றப்படும் சிறப்புக்குரியது திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில், மிகப் பெரிய லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். "ரத்னாவதி" என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவளது தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்தருளிய தலம் என்பதால் இங்குள்ள இறைவன் "தாயுமான சுவாமி" என்று அழைக்கப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி, தலா, 75 கிலோ என மொத்தம், 150 கிலோ எடையுள்ள பிரமாண்டமான கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட்டு, மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப் பிள்ளையாருக்கு படைக்கப்பட்டன.



    ராட்ஷத கொழுக்கட்டை தயாரிப்பதற்காக தேங்காய், பச்சரிசி மாவு, எள், உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று காலை, 9 மணியளவில், உச்சிப் பிள்ளையாருக்கும், அதைத்தொடர்ந்து மாணிக்க விநாயகருக்கும் கொழுக்கட்டைகள் படையல் இடப்பட்டன.
    மேள தாளங்கள் முழங்க, ராட்சத கொழுக்கட்டையை மலை உச்சிக்கு சுமந்துச் சென்ற கோயில் பணியாளர்கள், உச்சி பிள்ளையாருக்கு வைத்து படைத்து, அதை பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்தனர்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, மலைக்கோட்டை யானை லட்சுமிக்கு கஜபூஜையும்,  மாணிக்க விநாயகர், உச்சிப் பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து விநாயகரை வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தைப் போலவே வட மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அங்கு விநாயகரை இஷ்ட தெய்வமாக வழிபடும் வடமாநிலத்தவர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ALSO READ | வரலாறு, கலை இரண்டையும் சுமந்து நிற்கும் புதுக்கோட்டை குடுமியான் மலைக்கோவில்- இத்தனை சிறப்புகளா?

    அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரப் பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள், தங்கள் வீடுகளில் இருந்து பாதயாத்திரையாக கையில் பெரிய ஊதுபத்தியுடன் கிளம்பி வந்து, திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தி திருவிழாவான இன்று முதல், தொடர்ந்து வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வரை, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் தினந்தோறும் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க விருக்கிறார்.

    தொடர்ந்து மாலை வேலைகளில், பக்தி இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. மேலும், அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு தொடர்ந்து, 14 நாட்களில், தினந்தோறும் மாலை பாலகணபதி, நாககணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர் கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய விசேஷ அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    ALSO READ | அடடே! திருச்சி மலைக்கோட்டைக்கு இத்தனை சிறப்புகளா - சுவாரஸ்ய தகவல்கள்

    வரும், 12ஆம் தேதி மதியம், 12 மணியளவில் மாணிக்க விநாயகருக்கு, நூற்றுக்கணக்கான அபிஷேக பொருட்களை கொண்டு மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Trichy, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி