Home /News /trichy /

திருச்சி விமான நிலையத்தில் ரூ.2.34 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.2.34 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு கரன்சி

கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு கரன்சி

Tiruchirappalli | திருச்சி விமான நிலையத்தில், 2.34 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்ற, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருபவர்கள் தங்கத்தை கடத்தி வருவதும், அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக உள்ளது.

ஆனால், வழக்கத்திற்கு மாறாக திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இண்டிகோ விமானத்தில் பயணிக்கவிருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து கொண்ட மூவரை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது, அவர்களின் உடமைகளில் இருந்து, அமெரிக்க டாலர், மலேசியன் ரிங்கட், சிங்கப்பூர் டாலர் என, 2.34 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.

Also see... பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை - நாமக்கல் மருத்துவரின் சேவை..!

திருச்சியை சேர்ந்த முகமது சையது (34), ராஜ் முகமது (35), கலீல் ரகுமான் (34) ஆகிய மூன்று பேரை கைது செய்து, வெளிநாட்டுக்கு கடத்த பணத்தை கொடுத்தது யார்? இவர்கள் யாருக்கு பணத்தை கடத்தி செல்கிறார்கள்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Crime News, Foreign Currency, Trichy, Trichy Airport

அடுத்த செய்தி