செயற்கையான அரங்கம் அமைத்து, ஸ்டுடியோவுக்குள் கதை சொல்லிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை, கிராமத்துப் புழுதியிலும், வயல் வரப்பிலும் இழுத்துச் சென்று கதை சொன்ன இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் முதல் படம் "16 வயதினிலே". கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில், கதாநாயகியின் அறிமுகப் பாடல் "செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.."
பட்டி, தொட்டிகளெல்லாம் பட்டையை கிளப்பிய இப்பாடலுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. பாடலை எழுதியவர் அவரது தம்பி கங்கை அமரன். இந்த பாடல் மூலம் எல்லோருக்கும் செந்தூரப் பூ என்றால் தெரியும் என்றாலும், தமிழகத்தில் இந்த பூ மலரும் மரம் ஒன்று கூட இல்லை என்பது அதிசயமான ஆச்சரியமான உண்மை.
ஐஏஎஸ் முயற்சி
'செந்தூரப்பூ மரம் வட இந்தியாவில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் இல்லை' என்பதை, சத்தீஷ்கர் மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலராக உள்ள, தமிழகத்தை சேர்ந்த டாக்டர் சி.ஆர்.பிரசன்னா ஐஏஎஸ் உணர்ந்துள்ளார்.
அவரின் தீவிர முயற்சியால் அங்கிருந்து விதைகள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சியை சேர்ந்த மரம் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு சார்பில், தமிழகத்தில் முதல் முறையாக, திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் செந்தூரப்பூ மரக்கன்று நடப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் செந்தூரப்பூ மரக்கன்றினை நட்டு வைத்தார். திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமிக்கு, சில செந்தூரப்பூ மரக்கன்றுகளையும் வழங்கினார்.
Also see... சென்னையில் இன்றைய (ஜூலை 5, 2022) மின்தடை பகுதிகள்
அக்கன்றுகள் பெருமாள் கோயில்களில் நட்டு வைக்கப்பட உள்ளன. இந்நிகழ்வில், 'மரம்' தாமஸ், தண்ணீர் அமைப்பு நீலமேகம், சதீஸ்குமார், ஆர்.கே.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flower Carpet, Tree planted