ஹோம் /நியூஸ் /திருச்சி /

உலகக் கோப்பை கால்பந்து தமிழ் வர்ணனை : அசத்தும் திருச்சி இளைஞர்!

உலகக் கோப்பை கால்பந்து தமிழ் வர்ணனை : அசத்தும் திருச்சி இளைஞர்!

திருச்சி இளைஞர் ராவணன்

திருச்சி இளைஞர் ராவணன்

FIFA World Cup 2022 is available for free on JioCinema பிராந்திய மொழிகளில் உலகக் கோப்பையை ரசிக்க காந்திருந்த ரசிகர்களுக்கு ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலியில் வர்ணனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தமிழ் வர்ணனையில் திருச்சி இளைஞர் ராவணன் அசத்தி வருகிறார்.

கத்தாரில் களைகட்டிவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்தியா முழுவதும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பிராந்திய மொழிகளில் உலகக் கோப்பையை ரசிக்க காந்திருந்த ரசிகர்களுக்கு ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலியில் வர்ணனை செய்யப்படுகிறது.

தமிழ் வர்ணனையை, முன்னாள் வீரர்கள் ராமன் விஜயன், நல்லப்பன் மோகன்ராஜ், தர்மராஜ் ராவணன், விஜய் கார்த்திகேயன் மற்றும் பத்திரிக்கையாளர் ரகு ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

இவர்களில் தர்மராஜ் ராவணன், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை தர்மராஜ் விவசாயி. தாய் செல்வராணி இல்லத்தரசி.

இளம் வயதிலேயே கால்பந்து போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராவணன் கோவா, மகேந்திரா அணி மற்றும் பல்வேறு கிளப்புகளில் விளையாடிய அனுபவமும் பெற்றுள்ளார்.

ராவணனின் நேரடி தமிழ் வர்ணனையை கேட்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள் பூரித்து போயியுள்ளனர். உறவினர்களும், நண்பர்களும் தொடர்ந்து அவரது தமிழ் வர்ணனையை கேட்டு அகம் மகிழ்கின்றனர்.

இதையும் படிங்க : பிஃபா உலகக் கோப்பை தொடரை தமிழ் வர்ணனையோடு நேரலையில் பார்ப்பது எப்படி? 

சிறந்த கால்பந்து வீரராக இருந்த அவர் வர்ணனையாளராக மாறி, எங்களையும், எங்களது கிராமத்தையும் கெளரவப்படுத்தியுள்ளார்" என செம்பரை மக்கள் சிலாகிக்கின்றனர்.

கால்பந்து மீது இருந்த ஆர்வமும், அதற்காக அவரது அர்பணிப்பும் உலகக் கோப்பைக்கு வர்ணனை செய்யும் அளவிற்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. எந்த துறையாக இருந்தாலும் ஆர்வமும் அற்பணிப்பும் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு ராவணன் ஒரு உதாரணமாக திகழ்கிறார்.

Published by:Lakshmanan G
First published:

Tags: FIFA 2022, FIFA World Cup 2022, Football, Trichy