ஹோம் /நியூஸ் /திருச்சி /

குணசீலம் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள லட்ச ரூபாய் லஞ்சம்... பெண் அதிகாரி அதிரடி கைது...

குணசீலம் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள லட்ச ரூபாய் லஞ்சம்... பெண் அதிகாரி அதிரடி கைது...

லஞ்சம் கேட்ட மூர்த்தீஸ்வரி

லஞ்சம் கேட்ட மூர்த்தீஸ்வரி

Tiruchirappalli | இந்து அறநிலையத்துறையில் முறையான அனுமதிப் பெற்று, அதற்காக, மாநில அளவிலான நிபுணர் குழு (State level expert committee) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, 'தென் திருப்பதி' என்று போற்றப்படக்கூடிய, பிரசித்திப் பெற்ற ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் அமைந்துள்ளது. இக்கோயிலின் பரம்பரை டிரஸ்டியாக, குணசீலத்தைச் சேர்ந்த அரங்கநாதன் மகன் பிச்சுமணி ஐயங்கார் உள்ளார்.

ஆகமவிதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால், இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதையடுத்து, உபயதாரர்கள் உதவிகளின் மூலம் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டது. இது தொடர்பாக, இந்து அறநிலையத்துறையில் முறையான அனுமதிப் பெற்று, அதற்காக, மாநில அளவிலான நிபுணர் குழு (State level expert committee) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 2ம் தேதியன்று குணசீலம் கோயிலில் ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகும் ஆய்வறிக்கை கோயில் நிர்வாகத்திற்கு கிடைக்கப் பெறவில்லை. அதையடுத்து, கோயில் நிர்வாகத்தினர் கமிட்டியினரை தொடர்பு கொண்டுள்ளனர். அதன்பிறகு, கமிட்டியின் உறுப்பினரான, தொல்லியல் துறை வல்லுனரான மூர்த்தீஸ்வரி, கடந்த அக்டோபர் மாதம், 12ம் தேதி குணசீலம் கோயிலுக்கு மீண்டும் வந்துள்ளார்.

திருக்கோயில் டிரஸ்டியை சந்தித்து, 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் தான் கமிட்டியிலிருந்து ஆய்வறிக்கை வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு, பிச்சுமணி ஐயங்கார், 10 லட்ச ரூபாய் அதிகமாக உள்ளதாகவும், இந்த பணத்தை உபயதாரர்களிடம் கேட்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Also see... சென்னையில் 9-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை...

அதற்கு மூர்த்தீஸ்வரி, ஐந்து லட்ச ரூபாயை  குறைத்துக் கொண்டு, ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்றும், முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த ஆலோசனையின்படி, குணசீலம் கோயிலில் வைத்து பிச்சுமணி ஐயங்கார், தொல்லியல்துறை அதிகாரி மூர்த்தீஸ்வரியிடம்  ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்கும் போது, அவர் கையும் களவுமாக பிடிபட்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில், தமிழகத்தில் இது போன்று பல கோயில்களுக்கு சென்று மூர்த்தீஸ்வரி லஞ்சம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Bribe, Hindu Temple, HRNC, Trichy