முகப்பு /செய்தி /திருச்சி / ஆன்லைன் மூலம் வாங்கிய துப்பாக்கி... ஆடு மேய்ப்பவரை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்... மணப்பாறையில் பரபரப்பு..!

ஆன்லைன் மூலம் வாங்கிய துப்பாக்கி... ஆடு மேய்ப்பவரை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்... மணப்பாறையில் பரபரப்பு..!

துப்பாக்கி வைத்து மிரட்டும் முன்னாள் ராணுவ வீரர்

துப்பாக்கி வைத்து மிரட்டும் முன்னாள் ராணுவ வீரர்

இருசக்கர வாகனம் ஆடுகளின் மீது மோதியதில் ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் மணப்பாறை  அருகே உடையாபட்டி சேர்ந்த ராஜ்குமார் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த வழியாக வந்த டிஎன்பிஎல் ஆலையில் பாதுகாவலராக பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர் தாமஸ் ஜான் பிரிட்டோவின் இருசக்கர வாகனம் ஆடுகளின் மீது மோதியுள்ளது. இதில் ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ராஜ்குமாருக்கும், தாமஸ் ஜான் பிரிட்டோவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் வீட்டிற்கு இணைய தளத்தின் மூலம் வாங்கிய துப்பாக்கியுடன் சென்று துப்பாக்கியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார் தாமஸ்.

இதை அங்கிருந்த ஒருவர் தனது மொபைலில் வீடியோவாக எடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து ராஜ்குமார் மணப்பாறை  காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Army man, Crime News, Trichy