ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சி திருப்பராய்த்துறையில் நாளை துலாஸ்நானம்... பக்தர்கள் நீராட தடை - மாவட்ட ஆட்சியர்

திருச்சி திருப்பராய்த்துறையில் நாளை துலாஸ்நானம்... பக்தர்கள் நீராட தடை - மாவட்ட ஆட்சியர்

நாளை துலாஸ்நானம்... பக்தர்கள் நீராட தடை

நாளை துலாஸ்நானம்... பக்தர்கள் நீராட தடை

Tiruchirappalli | காவிரி ஆற்றில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, துலா ஸ்நானம் மற்றும் தீர்த்தவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், கோயில் செயல் அலுவலர் ராகினி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

காவிரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் நாளை (18ம் தேதி) நடைபெற உள்ள துலாஸ்நானம், தீர்த்தவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் ஏழு புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று காவிரியாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதா, கோதாவரி ஆகிய ஆறு புண்ணிய ஜீவ நதிகளுக்கும் இணையாக, தென்னாட்டில் பாயும் புகழ்பெற்ற, தனித்தன்மை வாய்ந்த நதியாக விளங்குவது காவிரி.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்குச் சமம் என்று புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடகிலிருந்து புறப்பட்டு பூம்புகாரில் கடலோடு கலக்கும் வரை, இப்புண்ணிய நதிக் கரையில் மூன்று இடங்கள் மிக விசேஷமான தீர்த்தக் கட்டங்களாக விளங்குகின்றன.

அதில் முதலாவது திருப்பராய்த்துறை, இரண்டாவது கும்பகோணம், மூன்றாவது மயிலாடுதுறை. ஐப்பசி மாதம் முதல் நாளன்று திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி கடைசி நாளில் மயிலாடுதுறையிலும் காவிரியில் நீராடுவது விசேஷமானது.

இவ்வகையில், இந்த ஆண்டுக்கான துலா மாதப்பிறப்பு புண்ணிய நீராடல் திருப்பராய்த்துறையில் நாளை (18ம் தேதி) வருகிறது. அன்று அதிகாலை சூரியோதய காலத்தில், திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரர், அகண்ட காவிரியில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பார்.

அப்போது ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் மூழ்கி உடலும், உள்ளமும் துாய்மை பெறுவர். பேரின்ப உணர்ச்சி பொங்க காவிரிக் கரையில் நின்று காட்சி கொடுக்கும் சிவபெருமானைப் பார்த்து வழிபடுவது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.

ஆனால், காவிரி ஆற்றில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, துலா ஸ்நானம் மற்றும் தீர்த்தவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், கோயில் செயல் அலுவலர் ராகினி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Also see... பைக், ஆடு திருடும் கும்பலை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்

மேலும், திருப்பராய்த்துறை காவிரி ஆற்றங்கரையில் இன்று நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், "காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, பொதுமக்கள் யாரும் நாளை இங்கு நீராட வர வேண்டாம்" என்று அறிவுறுத்தி உள்ளார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Cauvery River, Trichy