உளுந்தூர் பேட்டையில் தனியார் பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டியதாக பதிவான வழக்கில் திமுக எம்பி சிவாவின் மகன் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11 ஆம் தேதி உளுந்தூர் பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தும் திருச்சி சிவாவின் மகனும் பா.ஜ.க பிரமுகருமான சூர்யாவின் காரும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தன் காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ஜ.க பிரமுகர் சூர்யா அந்த தனியார் பேருந்து நிறுவனத்தின் பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டுவதாக பேருந்தின் உரிமையாளர் கொடுத்த புகார் கொடுத்துள்ளார்.
தனியார் ஆம்னி பேருந்தை அபகரித்ததாக திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவுச் செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக ஓபிசி பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் சூர்யா சிவா கைது செய்யபடப்பட்டுள்ளார்.
தன் மீதான கைது நடவடிக்கைக்கு உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் தூண்டுதலால் தன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக சூர்யா குற்றம்சாட்டி உள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(Trichy)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.