ஹோம் /நியூஸ் /திருச்சி /

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்: திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ அப்துல் சமது

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்: திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ அப்துல் சமது

 மமக பொதுச் செயலாளர் எம்எல்ஏ அப்துல் சமது

மமக பொதுச் செயலாளர் எம்எல்ஏ அப்துல் சமது

Tiruchirappalli | தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி காந்திஜியின் பிறந்தநாளையொட்டி ஆர் எஸ் எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உச்ச நீதிமன்றம் நிபந்தனை அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடையாணையை பெற வேண்டும் என்று மமக பொதுச் செயலாளர் எம்எல்ஏ அப்துல் சமது கூறியுள்ளார்

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்டத்தின் நிர்வாகிகள் பொது குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். இந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டத்திற்கு தேர்தல் அதிகாரியாக தமுமுக மாநில செயலாளர் மைதீன் செட் கான் கிளைப் பகுதி ஒன்றியம் பேரூராட்சி நகரம் நிர்வாக தேர்தலை நடத்தி புதிய மாவட்ட தலைமை நிர்வாகிகளை தேர்வு செய்தார்.

  இதில் திருச்சி மாவட்ட தலைவராக முகமது ராஜா பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன்ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது மற்றும் தமுமுக மாநில பொருளாளர் பொறியாளர் சபியுல்லா கான் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

  அதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளார் சந்திப்பில் மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ பேசுகையில், “

  தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி காந்திஜியின் பிறந்தநாளையொட்டி ஆர் எஸ் எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உச்ச நீதிமன்றம் நிபந்தனை அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடையாணையை பெற வேண்டும்’ என தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர்,  யார் வன்முறையை கையில் எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தை பயன்படுத்தக்கூடிய சக்திகள் அரசியலில் பதவிகளைப் பெற வேண்டும். கலவரங்களை ஏற்படுத்தி தன்னுடைய ஆட்சியை தக்க வைக்க வேண்டும். தான் நினைக்கக்கூடிய ஒரு தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்பதற்காக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீதும் சிறுபான்மையினர் மக்கள் மீதும் மதவெறி போக்குகளை கட்டவிழ்த்து விடப்பட்ட சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்.

  Also see... காஞ்சிபுரத்தில் கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க கூடாது... போலீஸ் உத்தரவு

  தமிழக மண்ணை மதவெறி மண்ணாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அது கன்னியாகுமரியில் நடந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி கோயம்புத்தூரில் நடந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி தமிழகத்தை மதவெறி மண்ணாக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட சம்பவங்கள் எல்லாம் எதிர்கொண்டு தமிழக மக்கள் அமைதி சமூக நல்லிணக்கத்தை சமூக நீதியை பாதுகாக்கின்ற வகையில் தமிழக மண்ணை பாதுகாத்து வருகின்றனர்.

  அதற்கு களங்கம் கற்பிக்கக் கூடிய வகையில் அதற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து” என்று கூறினார்.

  செய்தியாளர்: கோவிந்தராஜ், திருச்சி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: DMK, Trichy