Home /News /trichy /

கடனை திருப்பி கேட்டவரை அரிவாளுடன் துரத்திய திமுக பிரமுகர்- வைரலான வீடியோவால் பரபரப்பு

கடனை திருப்பி கேட்டவரை அரிவாளுடன் துரத்திய திமுக பிரமுகர்- வைரலான வீடியோவால் பரபரப்பு

திமுக பிரமுகர்

திமுக பிரமுகர்

Trichy district News: பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக, திருச்சி அருகே, திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர், பணம் கேட்டு வந்தவரகளை அரிவாளுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்தவர் நித்யா. இவர் திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் வெற்றிச்செல்வன் கன்னியாபட்டியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருகிறார். இவர், தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம், 2.6 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது.

அந்த பணத்தை குணசேகரன் பலமுறை கேட்டும் வெற்றிச்செல்வன் தரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் பணம் கேட்டவர்களை அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை ஆதாரப்பூர்வமாக பதிவுச் செய்ய நினைத்த குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்கள், அவரது வீட்டுக்குச் சென்று  பணம் கேட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துரத்திச் சென்ற திமுக பிரமுகர்


அப்போது, குடிபோதையில் இருந்த வெற்றிச்செல்வன், கையில் அரிவாளை எடுத்துக் கொண்டு, தரக்குறைவான வார்த்தைகளால் திட்ட, குணசேகரனின் சகோதரர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Must Read: பெண்ணுக்கு தொடர்ந்து டார்ச்சர்: காதலன் கைது.. முன்னாள் காதலனுக்கு போலீஸ் வலை

இதற்கிடையே, திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெற்றிச் செல்வன் அரிவாளால் வெட்ட துரத்தும் வீடியோ காட்சிகளை, குணசேகரன் தரப்பு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
Published by:Suresh V
First published:

Tags: Crime News, DMK, Trichy

அடுத்த செய்தி