ஹோம் /நியூஸ் /திருச்சி /

பெண் அதிகாரியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த திருச்சி டிஎஸ்பி... டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சென்ற புகார் கடிதம்

பெண் அதிகாரியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த திருச்சி டிஎஸ்பி... டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சென்ற புகார் கடிதம்

திருச்சி டிஎஸ்பி

திருச்சி டிஎஸ்பி

பரவாசுதேவன் மீது தமிழக டிஜிபிக்கு புகார் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்ததையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli | Tiruchirappalli

  பெண் அதிகாரியுடன் இருந்த நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டதால் திருச்சி டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  திருச்சி சரகத்தில், திருச்சி புறநகர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்கள் உள்ளன. திருச்சி சரக காவல் எல்லைக்குள் நடக்கும் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில், சரக டிஐஜி சரவண சுந்தர் ஒரு வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

  அந்த குழுவில், திருச்சி சரகத்தில் உள்ள, பெண் அதிகாரிகள் உட்பட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் உள்ளனர்.

  திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் பரவாசுதேவன். இவர் கடந்த,  19.05.2022 அன்று நள்ளிரவு, ஒரு பெண் போலீஸ் அதிகாரியுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இந்த வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார்.

  ALSO READ | கோலி - ரோஹித்தை திட்டியதால் கொன்றேன் - இளைஞர் கொலையில் நண்பர் பகீர் வாக்குமூலம்

  பதிவிட்ட சில நிமிடங்களில் அவர் அந்த பதிவுகளை அழித்துவிட்டாலும், அந்த புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  இந்நிலையில், 'திருச்சி சரக பெண் போலீசார்' என்ற பெயரில், டிஎஸ்பி பரவாசுதேவன் மீது தமிழக டிஜிபிக்கு புகார் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, டிஎஸ்பி பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

  செய்தியாளர்: கோவிந்தராஜ், திருச்சி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Trichy, Viral