திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதளத்தின் நீளத்தை, 8,136 அடியில் இருந்து, 12,500 அடியாக அதிகரிப்பதன் மூலம் கனரக விமானங்களை திருச்சியில் தரையிறக்க முடியும்.
இதன் மூலம், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் முடியும். வரும், 2025-2026 ஆம் ஆண்டுக்குள் பயணிகள் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்து திறனை, 3.52 மில்லியன் ஆக உயர்த்த இந்திய விமான போக்குவரத்து ஆணையரகம் கடந்த, 2010-2011 ஆம் நிதியாண்டில் திட்டமிட்டது. இதற்காக பாதுகாப்புத் துறையின், 167 ஏக்கர் நிலம் உள்ளடங்கிய, 510. 30 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், 345.62 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, கடந்த, 2018 ஆம் ஆண்டு மாநில அரசு நிர்வாக அனுமதி வழங்கி, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதேநேரத்தில், பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலத்தை பெறுவதில் பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.
இதனால், ‘விரிவாக்க பணிக்கு மத்திய அரசும், பாதுகாப்புத் துறையும் நிலத்தை வழங்க வேண்டும்' என்று தமிழக அரசும், திருச்சி எம்பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக, திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பலமுறை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்நிலையில், திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு, 167 ஏக்கர் நிலத்தை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்.

திருச்சி விமான நிலையம்
மேலும் அதில், ‘மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லோக்சபாவில் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை ஏற்று, மத்திய அரசு, 166.97 ஏக்கர் நிலத்தை திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக வழங்கி உள்ளது. இதற்காக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எனது நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Must Read : பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிவந்து மொட்டையடித்து துன்புறுத்தல்.. ஆட்கடத்தலா? - கோவை தன்னார்வ அமைப்பினரிடம் விசாரணை
இதன் மூலம், 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் துவங்கி, விரைவாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.