ஹோம் /நியூஸ் /திருச்சி /

கேஸ் சிலிண்டர் வெடித்து இருவர் காயம்... திருச்சியில் பரபரப்பு!

கேஸ் சிலிண்டர் வெடித்து இருவர் காயம்... திருச்சியில் பரபரப்பு!

தீயணைப்பு நிலையத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து

தீயணைப்பு நிலையத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து

தீயணைப்புத்துறை அலுவலகத்திலேயே சிலிண்டர் வெடித்த  சம்பவம் பகுதியில் அப்பகுதியில் பெரும்பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் அப்பாரட்டஸ் ஆக்சிஜன் கேஸ் சிலிண்டர் வெடித்து இருவர் காயமடைந்துள்ளனர்.

  அப்பாராட்டஸ் கேஸ் சீலிண்டரில் வளி மண்டல காற்றை நிரப்பி வைக்க செய்வது. மேலும் அதிகமான புகையின் போது இந்த வளிமண்டல காற்றை எடுத்து சென்று தீயணைப்பு வீரர்கள் சுவாசிக்க பயன்படுத்துவார்கள். அந்த வகை சிலிண்டர் தான் வெடித்துள்ளது.

  திருச்சி நீதிமன்றம் அருகே தீயணைப்பு துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது - இதில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர் - இன்று காலை வழக்கம் போல் அனைவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வளிமண்டல காற்றை ( ஆக்சிஜனை ) பெரிய சீலிண்டரில் இருந்து 3 கிலோ வரையிலான சிறிய அளவிலான சிலிண்டருக்கு மாற்றும் போது திடீரென வெடித்து விபத்தானது.

  Read More : ATM-ல் காசு வரல அக்கவுண்ட்ல பணம் மிஸ்ஸிங்.. செல்லோ டேப் பயன்படுத்தி நூதன கொள்ளை - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

  இதில் தீயணைப்பு துறை நிலைய அதிகாரி சரவணனுக்கு காலில்  பலத்த காயம் ஏற்பட்டது - இரத்த வெள்ளத்தில் துடி துடித்தவரை உடனடியாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சக ஊழியர்கள் அழைத்து சென்றனர். இதே போல் தீயணைப்பு துறை பணியாளர் பிரசாந்த் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

  இது குறித்து கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தீயணைப்புத்துறை அலுவலகத்திலேயே சிலிண்டர் வெடித்த  சம்பவம் பகுதியில் அப்பகுதியில் பெரும்பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது..

  செய்தியாளர்: கோவிந்தராஜ்

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Fire accident, Trichy