ஹோம் /நியூஸ் /திருச்சி /

சிங்கப்பூரிலிருந்து உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்தல்.. சிக்கியது எப்படி தெரியுமா?

சிங்கப்பூரிலிருந்து உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்தல்.. சிக்கியது எப்படி தெரியுமா?

தங்கம் பறிமுதல்

தங்கம் பறிமுதல்

அவரிடம் இருந்த 15,32,692 ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli | Tiruchirappalli

  சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் உள்ளாடைக்குள் தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

  திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வருகை தருகின்றன. இந்த விமானங்களில் வருகின்ற பயணிகளில் சிலர், தங்கத்தை விதவிதமான முறைகளில் கடத்தி வருவதும், அதை சுங்கத்துறை அதிகாரிகள் சாமர்த்தியமாக கண்டுபிடித்து பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

  இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த இண்டிகோ விமான பயணிகள் மற்றும் அவரது உடைமைகளை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

  ALSO READ | ஆயுத பூஜை கொண்டாட்டம் கோலாகலம்.. வீடுகள், நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு..!

  சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரை தனியாக அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள்  பசை வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 15,32,692 ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Gold, Singapore, Smuggling, Trichy Airport