கொரோனா அச்சம் நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பி.எஃப் 7 (BF 7) ஓமைக்ரான் கொரோனா தொற்று சமீபத்தில் வேகமாக பரவி வருவது மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸை விட 4.4 மடங்கு வீரியம் கொண்டதாக இந்த, BF.7 திரிபு வைரஸ் இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், நாள்தோறும் 4000 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அதில் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் 6 அல்லது 7 என்று இருப்பதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணிய தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை பி.எஃப்.7 வகை கொரோனா பரவவில்லை என்று கூறியுள்ள அவர், பொதுமக்கள் பதற்றப்பட வேண்டிய நிலை இல்லை என்றாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் கொரோனா அறிகுறிகள் இருந்தால், அங்கு வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில், நாடு முழுவதும முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தும் நடைமுறையை வருகிற 24ஆம் தேதி (நாளை) முதல் தொடங்க அறிவுறுத்தி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷண் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?
அதன்படி, திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கும் சுற்றறிக்கை வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தும் நடைமுறை நாளை (24-12-2022) காலை முதல் திருச்சி விமான நிலையத்தில் அமல்படுத்தப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Local News, Trichy, Trichy Airport