ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் தொடர் மழை எதிரொலி - கலெக்டர் ஆடியோ வெளியிட்டு அறிவுரை!

திருச்சியில் தொடர் மழை எதிரொலி - கலெக்டர் ஆடியோ வெளியிட்டு அறிவுரை!

திருச்சியில் தொடர் மழை - கலெக்டர் அறிவுரை

திருச்சியில் தொடர் மழை - கலெக்டர் அறிவுரை

Trichy News | திருச்சி புறநகர் பகுதிகளான மண்ணச்சநல்லூர், சமயபுரம், ஸ்ரீரங்கம் லால்குடி, திருவானைக்காவல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால்  திருச்சியில்  இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்  கன்டோன்மென்ட் சாலை,  உறையூர், பீமாநகர், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புத்தூர், தில்லை நகர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் சாலைகளின் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு மத்தியில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் திருச்சி புறநகர் பகுதிகளான மண்ணச்சநல்லூர், சமயபுரம், ஸ்ரீரங்கம் லால்குடி, திருவானைக்காவல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளார்.

    இதையும் படிங்க : திருச்சியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு

    மேலும் அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்களும், மாணவர்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற காலகட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் மின்கம்பிகள் அருந்து சாலையில் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    சிறார்களும், மாணவர்களும், பொதுமக்களும் பாதுகாப்பான முறையில் சாலையை கடக்க வேண்டும். மிகவும் கவனமாக சாலையை கடக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மின்னலின் தாக்கம் சில நேரங்களில் இருக்கக்கூடும். விவசாய நிலங்களில் விவசாயிகளும், பொதுமக்களும் இருக்க வேண்டாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவரும் பாதுகாப்பான முறையில் வீட்டில் இருக்கும்படி தாழ்மையோடு நான் கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய மாவட்டத்தில் மழையின் அளவு அதிகமாக இருக்கிற காரணத்தினால் நம்முடைய நீர்நிலைகள் அனைத்தும் பெரும்பாலான நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

    இதனால் சிறார்கள், மாணவர்களும் அதில் இறங்க வேண்டாம் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். பெற்றோர்கள் அவர்களை அனுமதிக்க வேண்டாம். நீர் நிலைகளில் இறங்கி எந்த ஒரு விபத்தும் நேரா வண்ணம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இதையும் படிங்க : திருச்சி ஊர் காவல் படையில் சேர விருப்பமா? - காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

    இந்த மழைக்காலங்களில் எந்த ஒரு விபத்தும் நிகழாத வண்ணம் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.

    இவ்வாறு அந்த ஆடியோவில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் : கோவிந்தராஜ் - திருச்சி

    Published by:Karthi K
    First published:

    Tags: Heavy rain, Trichy