ஹோம் /நியூஸ் /திருச்சி /

கோவை கார் வெடிப்பு - திருச்சியில் சோதனை..செல்போனை பறிமுதல் செய்து விசாரணை என தகவல்...

கோவை கார் வெடிப்பு - திருச்சியில் சோதனை..செல்போனை பறிமுதல் செய்து விசாரணை என தகவல்...

திருச்சி விமானா நிலையம்

திருச்சி விமானா நிலையம்

Kovai Bomb blast | என்ஐஏ விசாரணை வளையத்தில் உள்ள நபர்களை தமிழக காவல்துறையினர் முன்கூட்டியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக திருச்சியில் சோதனை நடைப்பெற்றுள்ளது.

  மேலும் நேற்றைய தினம் கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யபட்டுள்ள பெரோஸ் மற்றும் ரியாஸ் ஆகியோர் பேசிக்கொள்ளும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில் இன்று கோவை சம்பவத்தில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்ட, திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை ஸ்டார் நகரில் வசிக்கும் அப்துல் முத்தலிப் என்பவர் வீட்டில், திருச்சி கே.கே. நகர் சரக உதவி ஆணையர் சதீஷ்குமார் தலையிலான தனிப்படையினர் இன்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

  Read More : ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் ஆத்திரம்.. இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்

  சோதனையில் ஒரு செல்போன் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, என்ஐஏ விசாரணை வளையத்தில் உள்ள நபர்களை தமிழக காவல்துறையினர் முன்கூட்டியே விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடத்திய விசாரணை போல தான், திருச்சி மாநகரத்திலும் நடந்தேறியுள்ளது என கூறப்படுகிறது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Bomb blast, Coimbatore, Kovai bomb blast