ஹோம் /நியூஸ் /திருச்சி /

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்.. ரூ.3000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்.. ரூ.3000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Stalin in trichy | திருச்சியில் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தனி விமானம் மூலம் இன்று காலை சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்கிறார். அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக திருச்சி செல்லும் முதல்வருக்கு திமுக சார்பில் வழி நெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். இதில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கியும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து மணப்பாறை மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் உலகத் தரம் வாய்ந்த வன்மரக்கூழ் ஆலையை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.

அத்துடன், மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் நிர்வாக அலுவலக கட்டடத்தையும் திறந்து வைக்கிறார். இதையடுத்து, சன்னாசிப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் என்ற நிகழ்சியில் பங்கேற்று முடிவடைந்த திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் மீண்டும் தனி விமான மூலம் சென்னை திரும்புகிறார்.

First published:

Tags: CM MK Stalin, Trichy