ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் சிறார் ஆபாச வீடியோ பரப்பியவர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை...

திருச்சியில் சிறார் ஆபாச வீடியோ பரப்பியவர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை...

ராஜ - சிபிஐ சோதனை

ராஜ - சிபிஐ சோதனை

சிறார் ஆபாச வீடியோக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டது தொடர்பாக, மணப்பாறையில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

மணப்பாறையில் ராஜா என்பவரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூமாலைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு வயது 44. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வேலை பார்த்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டிற்கு 6 பேர் கொண்ட சிபிஐ போலீசார் மணப்பாறை போலீசார் உதவியுடன் ராஜாவின் வீட்டில் இன்று காலை முதல் திடீர் விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையை பொறுத்த வரை ராஜா என்பவர் 18 வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச வீடியோவை வெளிநாடுகளுக்கு அனுப்பியதன் அடிப்படையில் எழுந்த புகாரின் பேரில் தான் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Also see... விளை நிலங்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் - திருவாரூர் விவசாயிகள் வேதனை

18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் ஆபாச படங்கள் எங்கிருந்த வந்தது, அவர் எதற்காக அனுப்பினார் என்பது குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்தியாளர்: ராமன், மணப்பாறை

First published:

Tags: Manaparai, Sexual life, Trichy, Video