முகப்பு /செய்தி /திருச்சி / வாக்கிங் சென்றபோது வழிமறுத்த கும்பல்.. கேபிள் டிவி உரிமையாளர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. திருச்சியில் பயங்கரம்!

வாக்கிங் சென்றபோது வழிமறுத்த கும்பல்.. கேபிள் டிவி உரிமையாளர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. திருச்சியில் பயங்கரம்!

கேபிள் டிவி உரிமையாளர் கொலை

கேபிள் டிவி உரிமையாளர் கொலை

இட பிரச்சனை காரணமாக சிலருடன் முன் விரோதம் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli | Tamil Nadu

திருச்சி அருகே கேபிள் டிவி உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (47). கேபிள் டி.வி. உரிமையாளரான இவர் அருகாமையில் உள்ள பம்பரம்சுத்தி என்ற கிராமத்தில் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மஞ்சுளா தேவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மஞ்சுளா தேவி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காக காத்திருக்கிறார்.

மாதவன் நெருஞ்சலக்குடியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கைலாஷ் நகர் பகுதியில் தினமும் காலையில் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அவர் காலை 6.30 மணிக்கு கைலாஷ் நகர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை திடீரென வழி மறித்து மறைத்து வைத்திருந்த கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க | முடி உதிர்வால் மன உளைச்சல்.. ட்ரீட்மெண்ட் எடுத்தும் யூஸ் இல்லை.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மாதவனை தொடர்ந்து அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளது.

இதில் தலை, மார்பு உள்ளிட்ட உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயம் அடைந்த மாதவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிடையை செய்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: கோவிந்தராஜ், திருச்சி.

First published:

Tags: Cable Tv, Crime News, Murder, Trichy